tamilnadu

img

காவிரி விவகாரத்தில் உறுதியான பதிலளிக்காத ஒன்றிய அமைச்சர்!

புதுதில்லி, செப். 19 - தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு திறந்துவிடு மாறு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு எம்.பி.க்கள் குழு, ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகா வத்தை, செவ்வாயன்று நேரில் சந்தித்து மனு அளித்தனர். தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், நாடாளு மன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு  (திமுக), எஸ். ஜோதிமணி (காங்கிரஸ்),  மு. தம்பித்துரை மற்றும் என். சந்திர சேகரன் (அஇஅதிமுக), கே. சுப்ப ராயன் (சிபிஐ) பி.ஆர். நடராஜன் (சிபிஎம்), வைகோ (மதிமுக), தொல்.  திருமாவளவன் (விசிக), அன்புமணி ராமதாஸ் (பாமக), ஜி.கே. வாசன் (தமாகா), கே. நவாஸ் கனி (முஸ்லீம்  லீக்) மற்றும் ஏ.கே.பி. சின்னராஜ் (கொமதேக) ஆகிய 12 எம்.பி.க்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். ஒன்றிய அமைச்சருடனான சந்திப் பிற்குப் பிறகு, அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித் தார். அப்போது அவர் கூறியதாவது: “வழக்கமான ஆலோசனை கூட்டம் தான் இது.

காவிரி விவகாரத்தில் தமிழ கத்துக்கு உரிய நீரை திறந்துவிடும்படி ஒன்றிய அரசு கர்நாடகாவுக்கு வலி யுறுத்த வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தி டம் நாங்கள் வலியுறுத்தினோம். கர்நாடகாவில் தண்ணீர் இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டிற்கு காவிரி மேலா ண்மை வாரியத்தின் அறிவுறுத்தல்படி தண்ணீர் தர மறுக்கின்றனர். கிட்டத்தட்ட 54 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. ஆங்கா ங்கே சின்ன சின்ன அணைகளை கட்டி நீரை நிறுத்தி வைத்துள்ளனர். காவிரி ஒழுங்காற்றுக் குழு சுமார் 12 ஆயிரத்து 500 கன அடி நீர் கொடுக்கலாம் என  பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் வெறும் 5000 கன அடி நீர் கொடுக்கவே உத்தர விடப்பட்டது. அதிலும் முழுமையாக இல்லாமல் 3500 கன அடி நீர் மட்டுமே  திறந்து விடப்பட்டுள்ளது. கர்நாடகா நினைத்திருந்தால் போதிய தண்ணீர்  கொடுத்திருக்கலாம், அதனை அவர் கள் செய்யவில்லை. நெருக்கடியான நேரங்களில் தண்ணீரை எப்படி பகிர்ந்து கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் காட்டிய வழிமுறைகளையாவது பின்பற்றியிருக்கலாம். ஆனால் அதை யும் செய்யவில்லை. இந்த காரணத்திற் காக நாங்கள் மேல் முறையீடு செய்ய உள்ளோம்.

இப்படி எதற்கும் தலை அசைக்கா மல் கர்நாடகா அரசு செயல்பட்டு வரு கிறது. எதையும் கேட்கவில்லை என்றால் ஒன்றிய அரசு எதற்கு உள்ளது? என எங்கள் தரப்பிலிருந்து கேள்வி எழுப்பப்பட்டது. எனவே, ஒன்றிய அரசு  கர்நாடகத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். இந்நிலையில், நாங்கள் உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளோம். உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்குகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும். காவிரி ஒழுங்காற்று குழு கொடுக்கச் சொன்ன கன அடி நீராவது தர வேண்டும் என்ற வாதத்தை முன்வைக்க உள்ளோம்”.  இவ்வாறு துரைமுருகன் தெரிவித்தார்.

5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்த கர்நாடகா

முன்னதாக, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம், தமிழ்நா ட்டுக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி  தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு திங்களன்று உத்தரவு பிறப்பித்திருந் தது. இதனை ஏற்று திங்களன்று இரவே  கர்நாடகத்தின் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. செவ்வா யன்று காலை நிலவரப்படி, கர்நாட கத்தின் கிருஷ்ணராஜ சாகர் அணை யில் இருந்து 5,735 கனஅடியும், கபினி யில் இருந்து 3,490 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.