இராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை, ஆர்.எஸ். மங்கலம், பரமக்குடி ,தொண்டி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலவும் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை போர்க்கால அடிப்படையில் சரி செய்து, அனைவருக்கும் குடிநீர் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்கத்தின் சார்பில் காலிக் குடங்களுடன் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாடானையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநிலச்செயலாளர் எஸ்.சங்கர் சிறப்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் என்.கலையரசன், மாவட்டச் செயலாளர் கே. கணேசன் உள்ளிட்டோர் பேசினர்.