மாநகர பேருந்துகளை தனியார்மயமாக்காதே!
ஜெர்மன் வங்கியில் கடனுதவியுடன் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் புதிதாக 600 மின்சாரப் பேருந்துகளை கொள்முதல் செய்ய உள்ளது. இந்தப் பேருந்துகளை தனியார் மூலம் இயக்கி, பராமரிக்க போக்குவரத்துக் கழகம் ஒப்பந்தம் கோரியுள்ளது. அரசுப் பேருந்துகளை தனியார்மய மாக்கும் முடிவை கைவிட வேண்டும், ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்லவன் இல்லம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.