மத்திய அரசின் நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் மிக ஏழ்மையான ஐந்து மாவட்டங்களில் மூன்றாவது இடத்தில் விருதுநகர் மாவட்டம் உள்ளது. புதுக்கோட்டை முதலிடம், விழுப்புரம் 2 வது இடம், அரியலூர், சிவகங்கை 4 வது, 5 வது இடங்களில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
நீர் ஆதாரம், சுகாதாரம், கல்வி, மக்களின் வாழ்க்கை நிலை, பாதுகாப்பு, வறுமை நிலை, எளியமுறை வர்த்தகம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வு செய்து இவ்வாறு வரிசைப்படுத்தப்பட்டுள்ளதாக நிதி ஆயோக் கூறியுள்ளது.
நிதி ஒதுக்காத ஒன்றிய அரசு
வின் பின் தங்கிய 100 மாவட்டங்களில் தமிழ கத்தில் விருதுநகர், இராமநாதபுரம் ஆகி யவை அறிவிக்கப்பட்டன. இதையடுத்து, இதற்கென தனி ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரும் நியமிக்கப்பட்டார். ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பலமுறை விருதுநகர் வந்து ஆய்வுக் கூட்டங்களை நடத்தினார் பின் தங்கிய மாவட்டம் என்பதை முன்னேறத் துடிக்கும் மாவட்டம் என்று பெயரை மாற்றி னார். ஆனால், முன்னேற்றத்திற்காக எவ்வித சிறப்பு நிதியும் ஒதுக்கவில்லை. வழக்கம் போல ஒன்றிய அரசு வெறும் வாயால் வடை சுட்டது. ஏழ்மை நிலையில் உள்ள விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு, அச்சுத் தொழிலில் தமிழகத்தில் முதலிடத்தில் உள்ள சிவகாசி மாநகரமும், பஞ்சாலைத் தொழிலில் தமிழ கத்தில் மூன்றாவது இடத்தில் உள்ள இராஜ பாளையம் பகுதியும், எண்ணெய், பருப்பு வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் விருது நகரும், தமிழக அரசின் சின்னமான ஆண்டாள் கோபுரம் உள்ள திருவில்லிபுத்தூரும், மருத்து வத் துணி உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சத்திரப்பட்டி பகுதியும் உள்ளன. இத்தனை இருந்தும், பின்தங்கிய ஏழ்மை நிலைக்கு காரணம் என்ன? மாவட்டத்தில் நகர்புற விரிவாக்கம் அதி கரித்துள்ளது. கிராமப்புறங்களில் விவசாயம் செய்யும் நிலப்பரப்பு குறைந்து வருகிறது. நகர் பகுதிகளில் பல தொழில்கள் இருந்தா லும், நிரந்தரமான வேலை, வாழ்க்கை தேவைக்கான ஊதியம் இல்லை. பட்டாசு ஆலைகளில் தொடர் நெருக்கடியால் ஆண்டுக்கு 6 மாதமே வேலை கிடைக்கிறது. பஞ்சாலை, விசைத்தறி, ஆயத்த ஆடைத் தொழிலாளர்களுக்கு சட்டப்படியான கூலி கிடைக்கவில்லை. சராசரியாக மாத வரு மானம் ரூ.6000 முதல் 10 ஆயிரம் வரை மட்டுமே கிடைக்கிறது.
20 நாள்தான் வேலைவாய்ப்பு
மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான முறைசாராத் தொழிலாளர்களுக்கு மாதத்தில் 15 முதல் 20 நாட்களுக்கு மட்டுமே வேலை யும், அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் வரை யிலான வருமானமே கிடைக்கிறது. வரு மானம் குறைவு விலைவாசி உயர்வால் மக்களின் வாழ்க்கை நிலை ஏழ்மையிலே உள்ளது. மாவட்டத்திலேயே வத்திராயிருப்பு, சேத்தூர் பகுதிகளில் மட்டுமே ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று போகம் விவசாயம் நடைபெறுகிறது. அதிக அளவு நீராதாரம் உள்ளது. இதர அனைத்து பகுதிகளிலும் ஒரு போக விவசாயம் கூட சரிவர நடப்பதில்லை. கிராமப்புற சிறு குறு விவசாயிகள் , விவ சாயத் தொழிலாளர்களின் வாழ்க்கை வறுமை நிலையிலேயே உள்ளது.
கல்வியில் முன்னேறி இருந்தாலும்...
கல்வியில் பத்து, பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் தமிழக அளவில் தொடர்ந்து பல ஆண்டுகளாக முதலிடம் அல்லது இரண்டாமிடம் பிடிக்கும் அளவு முன்னேறி இருந்தாலும், அரசுப் பள்ளிகள் நகர, கிராமப்புறங்களில் பெருமளவு செயல் பட்டு வந்தாலும் பள்ளியில் சேரும் மாண வர்களில் ஆரம்பக் கல்வியோடு பாதிப்பேரும், மேல்நிலை கல்வியோடு பெரும் பகுதியின ரும் படிப்பை நிறுத்தும் நிலை. 10 சதம் பேர் கூட உயர்கல்விக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. மாவட்டத்தில் அரசுக் கல்லூரி, அரசு உதவிபெறும் கல்லூரிகளை விட தனி யார் சுயநிதி கல்லூரிகளே கோலோச்சு கின்றன. அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் பெரும்பாலான படிப்புகளுக்கு கட்டணம் கட்டும் நிலையே உள்ளது. வறுமை நிலை யில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெரும் பாலான மாணவர்கள் கல்லூரி வாசலில் கால் வைக்கக் கூட முடியாத அவல நிலை. மதுரைக்குத்தான் செல்ல வேண்டும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவனைகள் அதிகம் உள்ளன. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் உள்ளது. பல மருத்துவமனைகள் வெற்று கட்டி டங்களாக மட்டுமே உள்ளன. பரிசோதனைக் கருவிகள் இல்லை. கருவிகள் இருந்தால் பரி சோதனை செய்திட பணியாளர்கள் இல்லை. மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், மருந்துகள் பற்றாக்குறையால் காய்ச்சல், தலைவலி தவிர நெஞ்சுவலி போன்ற பெரிய நோய்களுக்கு மதுரை போன்ற பெரு நக ரங்களுக்குச் சென்று பல லட்சம் செலவு செய்யக் கூடிய நிலையே உள்ளது.
பத்துக்குப் பத்து
மக்களின் வாழ்க்கைத் தேவையில் மிக முக்கியமானது வீடு. நகர்ப்புறங்களில் உள்ள முறைசாரா தொழிலாளர்களுக்கு சொந்த வீடு இல்லாத நிலையில் வாடகை வீடுகளில் வசிக் கின்றனர். வருமானத்தில் பாதி வாடகைக்கு செலவு செய்யும் நிலையும் உள்ளது. அரசு புறம் போக்கு நிலங்களில் மண், கல், சிமிண்ட் ஓடுகள் மூலம் சின்னஞ்சிறு வீடு கட்டி அதில் பல குடும்பங்கள் வசிக்கின்றன. பல அறைகளைக் கொண்டு பல்லாயிரம் சதுர அடியில் கட்டப்பட்ட சொகுசு வீடுகள் உள்ள சில நகரங்களின் சில பகுதிகளில் பத்துக்கு பத்து 100 சதுர அடி வீடுகளில் குளி யலறை, கழிவறை, சமையலறை, சாப்பிடும் அறை, படுக்கையறை, பூஜை அறை என அனைத்தும் ஒரே அறையில் வாழும் பல குடும்பங்கள் உள்ளன.
களத்தில் நிற்கும் கட்சி
ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படைத் தேவைகளான கல்வி, வேலை, மருத்துவம், சுகாதாரம், வீடு போன்ற கோரிக்கைகளுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து பல போராட்டங்கள் நடத்தி வந்துள்ளது. 2018ல் டிசம்பரில் மாவட்டம் முழுவதும் 3 நாட்கள் 10 நடை பயணக்குழுக்கள் மூலம் பல்லாயிரம் மக்களைச் சந்தித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி மக்கள் கோரிக்கை பேரணி நடத்தியும், 2020ல் கொடிய கொரோனா நோயினாலும், பொது முடக்கத்தா லும், மாவட்ட மக்களின் பாதிப்பு குறித்து 3000 பேரிடம் நேரில் சென்று ஆய்வு நடத்தி ஆய்வ றிக்கை வெளியிட்டு கோரிக்கை முழக்கப் போராட்டம் மூலம் சில நிவாரணங்கள் பெற்றுக் கொடுத்தோம். கொரோனா 2 வது அலையின் போதும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி, இரத்ததானம், மருத்துவ உதவி மாவட்டம் முழுவதும் பரவலாக செய்யப்பட்டது. வரும் டிசம்பர் 12,13 ஆகிய தேதிகளில் சிவகாசியில் நடைபெறும் மாவட்ட மாநாட்டில் விருதுநகர் மாவட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து விவாதித்து தீர்மானங் கள் நிறைவேற்றி எதிர்கால போராட்டங்க ளுக்கும் திட்டமிடப்பட உள்ளது.
வாருங்கள்... கரம் சேருங்கள்!