திமுக கூட்டணி கட்சிகளுக்கு கூடுதல் சீட்டுகள் ஒதுக்குவது குறித்து தலைமை முடிவு செய்யும்!
அமைச்சர் கே.என். நேரு பேட்டி
திருச்சிராப்பள்ளி, ஜூலை 1- திருச்சி தில்லைநகர் அலுவலகத்தில் திமுக முதன்மைச் செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என். நேரு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ஓரணியில் தமிழ்நாடு எனும் மாபெரும் திமுக உறுப்பினர் சேர்க்கை பரப்புரை திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், செவ்வாய் அன்று தொடங்கி வைத்துள்ளார். நீட் தேர்வு விலக்கு, இந்தி மொழி திணிப்பு எதிர்ப்பு உள்ளிட்ட ஒன்றிய அரசு தொடர்ச்சியாக தமிழகத்தை வஞ்சிப் பது தொடர்பாக பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்லி, விரும்பும் மக்களை தமிழக முழுவதும் நாளை மறுநாள் முதல்உறுப்பினர்களாக சேர்க்க உள்ளோம். பாஜக ஆளும் மகாராஷ்டிரா மாநில முதல்வர்கூட இந்தி வேண்டாம். இரு மொழிக் கொள்கை போதும் என கூறியுள்ளார். மொத்த வாக்காளர்களில் 30 சத வீதம் பேரை திமுகவில் உறுப்பி னர்களாக சேர்க்க இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திமுகவில் ஒரு கோடிக்கு மேல் உறுப்பி னர்கள் உள்ளனர். அதை 2 கோடியாக மாற்ற முதல்வர் கூறியுள்ளார். டாஸ்மாக் மதுபான கடைகள் படிப்படி யாக குறைக்கப்படும். இனிமேல் திறக்கப்படாது என நீதிமன்றத்தில் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை இளைஞர் கொலையில் சிபிஐ விசாரணை கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது, டிவியை பார்த்துதான் துப்பாக்கிச் சூட்டை தெரிந்து கொண்டேன் என்று சொன்னார். தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகை 6 கோடியாக இருக்கும் போது, இரண்டு கோடி பேரை, புதிதாக கட்சி ஆரம்பித்து உள்ள தமிழக வெற்றி கழகத்தால் சேர்க்க முடியும். அவர்கள் சொல்வது நம்புவது போல் இல்லை. கூடுதல் சீட்டுகள் கேட்கும் கூட்டணி கட்சிகளுக்கு சீட்டு ஒதுக்கீடு செய்வது குறித்து தேர்தல் நேரத்தில் தலைமை முடிவு செய்யும். பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சில பணி கள் உள்ளதால் தாமதம் ஆகி உள்ளது. வருடாந்திர பராமரிப்புக்கு நிதி ஒதுக்கப்பட்டு நிதி ஆலோசனைக் குழு அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட் டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் ஒரு வாரத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்படும் எனத் தெரி வித்தார்.