திருவில்லிபுத்தூர்:
ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக மாவட்ட வழக்கறிஞர் அணிஅமைப்பாளர் திருமலை அப்பன் அமைச்சர் புதனன்று விருதுநகர் எஸ்பி பெருமாளி டம் புகார் மனு அளித்துள்ளார்.
கடந்த 6 12 20 20 அன்று விருதுநகர் அரசினர் சுற்றுலா மாளிகையில் அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும் பால்வளத் துறை அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்கள் கூட்டத்தைக் கூட்டி அதில்எங்கள் கட்சியின் தலைவர் மு க ஸ்டாலினையும் நாடாளுமன்ற உறுப்பினரும் துணை பொதுச் செயலாளருமான ராசாவையும் ஆபாசமாகவும் அவதூறாகவும் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியுள்ளார்அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் பதவிப்பிரமாணம் செய்த பிறகு சட்டம் ஒழுங்கு சீர்குலைவுசெய்யும் வகையிலும் சமுதாயம் மதம் மற்றும் அரசியல் கட்சிகளுக்கிடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும் நடந்து வருகிறார், வன்முறை பேச்சினை வேண்டுமென்றே இந்திய தண்டனைச் சட்டத்தை சமூக வலைத் தளங்கள் மூலமாகவும் பரப்பி வருகிறார்
இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 153, 153(a ) ,294 (பி) ,504,505(I),505(II), 506(I)ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றங்களை நிகழ்த்தியுள்ளார். அதன் ஆதாரமாக ராஜேந்திர பாலாஜியின் வன்முறை பேச்சினை பதிவு செய்யப்பட்ட பென் டிரைவ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே எனது புகார் மனு மீதுநடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி இல்லாததால்மேற்படி புகார் மனுவை ஏடிஎஸ்பி மாரிராஜிடம் வழங்கினார்.