கொரோனா தொற்று பர வல் காரணமாக கடந்த தீபாவளி பண்டிகையின்போது ஊதியம், போனஸ் ஏதுமின்றி வர்த்தகம் களையிழந்து காணப் பட்டது. தற்போது சற்று மூச்சு விடுகிற நிலையில் தொழில்கள் நடைபெறுவ தால் வர்த்தகம் களை கட்டுகிறது. பொதுவாக ஆடி மாதம் வியாபாரம் மந்தமாக இருக்கும் என்பதால் பல்வேறு தள்ளுபடி அறிவித்து நுகர்வோர்களை தங்கள் பக்கம் வியாபாரிகள் இழுப்பர். ஆனால் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டும் வணிக, வர்த்தக கடைகளில் பல்வேறு தள்ளுபடி, சலுகை திட்டங்கள் அறிவிக்கப்பட்டு நுகர்வோர்களை தந்திர மாய் இழுப்பது நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் மட்டும வழக்க மான நாட்களில், ஜவுளிக்கடை மற்றும் இதர வணிக வர்த்தக கடைகளில் நாள் ஒன்றுக்கு சுமார் 10 கோடி ரூபாய்க்கு விற்பனை நடைபெற்று வருவதாக விபரங்கள் கூறுகிறது.
இந்த தீபாவளி பண்டிகையையொட்டி நாள்தோறும் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வியாபாரம் நடைபெறுவதாக வியாபாரிகள், வர்த்தக நிறுவனத்தினர் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து கோவை பெரிய கடை வீதி யைச் சேர்ந்த மொத்த வியாபாரம் செய்யும் வர்த்தகர் ஒருவர் கூறுகையில், கோவை மாவட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளிக்கடைகள், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீட்டு உபயோக பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் பொருட் கள் கடைகள் உள்ளது. கோவை மாநக ரம் மற்றும் புறநகரத்தில் ஜவுளிக்கடை களில் தினமும் 30 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வியாபாரம் நடைபெறுகிறது. எலக்ட்ரானிக் பொருட்களான தொலைக் காட்சி, குளிர்சாதன பெட்டி, வாசிங் மெசின், ஏர்கூலர் உள்ளிட்ட பொருட் களை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச்செல் கின்றனர். இதேபோன்று பர்னிச்சர் வகை களான கட்டில், பீரோ, மெத்தை, நாற் காலி உள்ளிட்ட பொருட்களின் விற்பனை யும் அதிகமாகி வருகிறது.
கடந்த காலங் களில் கொரோனா நோய் பரவல் கட்டுட் பாடு காரணமாக வணிக, வர்த்த நிறு வனங்கள் ஸ்தம்பித்து கிடந்தது. நடப்பாண்டில் தீபாவளி காலத்தில் கோவை நகர், புறநகரில் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வியாபாரம் நடை பெறுவதாக தெரிவித்தார். இன்னும் தீபா வளிக்கு ஒரிரு நாட்களே உள்ள நிலையில், இனி ஜவுளி விற்பனை குறையும் இருப்பினும் ரெடிமேட் அயிட்டங்களின் விற்பனை தீபா வளியின் இறுதி நாள் வரையில் உச்சத் திலேயே இருக்கும். இதுபோக, வளையல், கம்மல், பெல்ட் மற்றும் காலணி போன்ற வைகளின் விற்பனையும் சூடு பிடித்து உள் ளது. இன்னும் அரசு துறை சார்ந்தவர்க ளுக்கான போனஸ் அறிவிப்பு மட்டுமே வெளிவந்துள்ளது. அவர்களின் கைக ளுக்கு பணம் வந்தவுடன் அவர்களின் வருகை மேலும் வியாபாரம் அதிகரிக்கும். பெரிய கடைகளைவிட சிறிய கடைகள், பிளாட்பார கடைகளில் கூட்டம் இரு மடங்கு உள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள சிறுகுறு தொழில்கள் பலவும் தீபாவளிக்கு முந்தைய நாளிலேயே தொழிலா ளிகளுக்கு போனஸ் வழங்கப்படு வதால் அவர்களும் சந்தையை தேடி வருவார்கள். இனி வரும் சில நாட்கள் விற் பனை உச்சத்தை எட்டும். இந்த வியாபாரத்தினால் பணப்புழக்கம் அதிகரிக்கும். இந்த வியாபாரத் தின் பயனாக நான்கு, ஐந்து மாத காலத்திற்கு ஜவுளி, விவசாயம் உள்ளிட்ட உற்பத்தி சார்ந்த துறை களின் வேலை தடையின்றி தொட ரும், என்றார்.