tamilnadu

img

அழுகுடிகள் அல்ல உழுகுடிகள்! - வெ.ஜீவகுமார்

கங்கை, யமுனை, ராவி, சட்லஜ் ஆகிய நதிகளில் நீர் பாதரசமாக ஒளிர்ந்து ஓடிக் கொண்டிருந்தது. தமக்கு பரிச்ச யமான கால்களின் ஸ்பரிசத்தால் கரைகள் மிருதுவாகி இருந்தன. கோதுமை வயல்களில் நீண்ட கால இடைவெளியில் மகளிரின் சிரிப் பொலிகள் கேட்டன. வீணைகள் இசையை  மீட்டுவது போல் டிராக்டர்கள் கான முழக்கத் தோடு விரைந்தன. 73 வயதான குர்மீத் சிங் தில்லியிலிருந்து தன் சொந்த ஊரான பாட்டியாலாவிற்கு 378 நாட்கள் கழித்து வந்து இருந்தார். அவரின் விழிகள் அந்த நிலத்தை ஈரத்துடன் தழுவிக்கொண்டிருந்தன. அந்த பெரியவருடன் சுமார் 4 பேர் நடந்து போயினர். குர்மீர்சிங் கூறினார்; ”அவர்களிடம் சிறை கள் இருந்தன, படைகள் இருந்தன. துப்பாக்கி கள் இருந்தன. வாட்கள் இருந்தன. அவர்கள் இருந்த இடமோ அரண்மனை.   நம்மிடமோ வெறும் கனவுகள்தான் இருந்தன, நாம் கிடந்ததோ ரோட்டு ஓரங்களில்”  என்று கூறிய அவர் தம் நண்பர்களை அழைத்துக் கொண்டு ஹரியானாவில் உள்ள ஒரு கல்லறைக்கு விரைந்தார்.  அந்த கல்லறை ஹரியானா விவ சாயி சுசில் ஹாஜலுடையது ஆகும். விவசாயி கள் போராட்டத்தில் அவர் கொல்லப்பட்டி ருந்தார். அங்கிருந்து அவர்கள் போக திட்டமிட்ட இடம் உ.பி.யின் லக்கீம்பூர். இங்கும் விவ சாயிகள் உயிர்களை பலி கொடுத்திருந்தனர். 

உலகமே காணாத ஒரு போராட்டம் நடந்து முடிந்திருக்கிறது.  தில்லியில் அவர்கள் ஒரு வரு டத்திற்கு மேல் முகாமிட்டிருந்தனர். கழுகுக ளும் வல்லூறுகளும் கூட அந்த முகாமிற்கு மேலே இரக்கத்தோடு பறந்தன. அவ்வப்போது வெளிநாடுகள் போன பிரதமரின் விமானத்தின் இறக்கைகளோ ராட்சதக் குளவிகளின் சிறகுகளாக பறந்தன.  இந்தியாவை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்த கிழக்கிந்திய கம்பெனியினர் அறிமுகப் படுத்திய நிலவரி முறை, ஜப்திக் கொடுமை, லேவா தேவி சுரண்டல், அந்நிய ஆட்சி ஆதிக்கம், முரட்டுத்தனமான நிர்வாகம் ஆகிய வைதான் உழவர்களை ஒருங்கிணைத்து முதலில் களம் காண வைத்திருந்தது. ஏனெ னில் கிழக்கிந்திய கம்பெனியினர் முதலில் விவசாயத்தின் மடியில்தான் கை வைத்தனர்.  இதனை எதிர்த்து 1772 வங்காளத்திலே ரங்பூர் மாவட்டத்தில்தான் உழவர்களின் முதல் கிளர்ச்சி நடந்தது. குறிப்பாக இந்த காலத்தில் வெள்ளைக்காரர்களின் ஆட்சி ஜமீன்தாரி முறையை உருவாக்கி நிரந்தர நிலவரி திட்டத்தை கொண்டு வந்திருந்தனர். வரி வசூல் என்ற பெயரில் நிலங்களை அடித்து பிடுங்கினார்கள். அப்போதைய  விவசாய முறையில் நிலங்கள் தரிசாகக் கிடந்தன. பொட்டல்வெளியாக கிடந்த நிலத்தில் பள் ளங்களில் தண்ணீர் கிடக்கும். அந்த தண்ணீ ரில் மீன் இருக்கும். தவளையின் சத்தம் கேட்கும். விவசாயிகள் அந்த தண்ணீரை பயன்படுத்தி மண்ணை உழுது வளப்படுத்தி பொன் ஏர் பூமியாக மாற்றினார்கள். 

விளைச்சலின் அமோகத்தை கண்ட ஜமீன்தாரர்கள் இது எனது நிலம், எனக்கு வரி கட்டு என்றார்கள். அந்த தீவாந்தர தண்டத்தை கொடுக்க முடியாமல் பரந்த பூமியில் விவசாயி கள் நிலம்விட்டு நிலம் ஏகினர். அதனையும் ஜமீன்தாரர்கள் பிடுங்கினர். விவசாயிகள் கங்கை நதியை அடையும் வரை நிலங்கள் விவசாயிகளிடமிருந்து பாக்கி என்ற பெயரில் பறிக்கப்பட்டது. கங்கைக் கரையில் அடியவர் கள் கூட்டம் இல்லை. அடிமைகளின் கூட்டமே இருந்தது. இதனை அடுத்து லேவாதேவி வசூல் துவங்கியது. அப்போதுதான் காரன் வாலிஸ் இந்தியா வருகிறார். அவர் துப்பாக்கி முனையில்  வரி வசூலை நடத்துகிறார்.  மேற்கூறிய 1772இல் வங்காளத்தில் ரங்பூர் மாவட்டத்தில் 50,000 விவசாயிகள் சாகுபடி செய்ய வயலில் இறங்கினர். வரி கொடுக்க மறுத்தனர். இவர்களை அடக்க கிழக் கிந்திய கம்பெனி 4 பட்டாளங்களை அனுப்பி வைத்தது. உழவுக்குடியினர் அஞ்சவில்லை. வெள்ளைக்கார பட்டாளத்தின் ஒரு தளபதியாக அக்கிரமம் செய்த தாமஸ் என்பவன் தலையை விவசாயிகள் துண்டித்தனர். போராட்டங்களில் கலந்து கொள்ளும் விவசாயிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படும், அவர்கள் குடும்பம் அடிமையாக்கப்படும் என்ற அறிவிப்புகளுக் கெல்லாம் உழுகுடியினர் அஞ்சவில்லை. இந்த போராட்டத்தைத் தொடர்ந்து எங்கு பார்த்தாலும் கலகங்கள் வெடித்தன. 15,000 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. 50,000 விவசாயிகள் அடங்கிய பெரும் போராட்டமாக நிலமெங்கும் தீ பூத்தது. இந்தக் கலகங்கள் வெடித்த சூழ்நிலையில் வெள்ளையர்கள் சில விசாரணை கமிஷன்களை அமைத்தனர். இந்தியாவில் விவசாயிகள் பிரச்சனைக்காக முதல் கமிஷன் 1776இல் நியமிக்கப்பட்டது. ஆண்டர்சன், போகில், கிராப்டஸ் ஆகியோர் அதன் உறுப்பினர்கள். அவர்கள் 1776 மார்ச் சில்  தனது அறிக்கையினை கொடுத்தனர். 

இந்திய விவசாயிகள் சந்தித்த அடுத்த பிரச்சனை கந்து வட்டி அல்லது லேவாதேவி வட்டியின் கொடுங்கோன்மை வரி வசூல் ஆகும். இதற்காகவே வெல்லெஸ்லி பிரபு 1797இல் ஹப்டம் சட்டம் என்பதைக் கொண்டு வந்தார். ஒரு வீட்டிற்குள் அத்துமீறி நுழைவது, கதவை தட்டி உடைப்பது, உடைத்து உள்ளே செல்வது, அங்கே உள்ள பொருட்களை அள்ளுவது, எதை வேண்டுமானாலும் தூக்கிச் சென்று ஜப்தி செய்வது என்ற அதிகார வெறியை வெல்லெஸ்லியின் சட்டம் வழங்கி யது. கடுமையான வரி வசூல் கொடுமை நடந்தது. வசூலிக்க முடியாதெனில் ஆடு, மாடு களையும், பெண்களையும் தூக்கிச் செல்வது, கட்டத் தவறினால் குதிரைகளையும் யானைக ளையும் விளைந்த பயிர்களில் மேய விடுவது, எப்படியும் பயிர்களை அழித்தே தீருவது என்ற சதி வலையை ஜமீன்தாரர்கள் பின்னுகிறார் கள்.  இயல்பாக சந்தால் விவசாயிகள் சாந்த மானவர்கள். ஆனால் சாது மிரண்டால் காடு கொள்ளாது. இவர்கள் அஞ்சவில்லை. 30-06-1855இல் 7,000பேர் சேர்ந்து ஒரு கூட்டத்தை நடத்தி கூட்டத்தின் அடையாளமாக சல் மரத்தின் பிரதியை அனுப்புகிறார்கள். அத்துடன் அரசு ஆணையர், பகல்பூர் கலெக் டர், மேஜிஸ்டிரேட், தானாதிபதி, போலீஸ் அதி காரி ஆகியோருக்கும் ஒரு கடிதம் அனுப்புகி றார்கள்.  அந்த கடிதத்தில் உங்கள் வசூல் கொடுமை அதிகமாக இருக்கிறது, வசூலை நிறுத்துங்கள், நாட்டை நாங்கள் கையகப் படுத்துவோம். எங்கள் அரசை நிறுவப்போகி றோம், நாட்டை விட்டு வெளியேறுங்கள், உங்களுக்கு 15 நாட்கள் கெடு கொடுக்கிறோம் என குறிப்பிடப்பட்டிருந்தது. உழவர்கள் மக்கள் இராணுவத்தையும் அமைத்திருந்தார்கள்.

சந்தால் கலகம் என்பது அவுரி சாகுபடிக்கு எதிரான ஒரு போராட்டம். அதனை எதிர்த்து பிரிட்டிஷ் அரசு ராணுவச்சட்டத்தை கொண்டு வருகிறது. ராணுவச்சட்டத்தை கண்டு விவசாயி கள் பயப்படவில்லை. அவர்களுக்கு இருந்த ஆயுதம் என்பது வில்அம்புதான். இந்த வில்லை இடது கையிலும் வலது கையிலும் ஏந்தியும் முடியாத போது தரையில் அமர்ந்து கொண்டு காலின் மூலமும் எய்து போரிட்டனர். சந்தாலர்களின் புரட்சிக்கு அனைத்து மதத்தின ரும் சாதியினரும் ஆதரவை அள்ளித்தந்த னர். இப்போராட்டத்தில் உரிமைகள் மறுக்கப் பட்டோரின் ஆவேசம் அதிகமாக இருந்தது. கொள்ளையடித்த வட்டிக்காரர்களின் தலைக ளை துண்டித்து சிவசக்கர பலீஸ்வரன் கோயி லின் பலி பீடத்தில் வைத்தார்கள்.  இதனை எதிர்க்க முடியாமல் திணறிய ஜமீன்தாரர்கள் யானைப் படையை திரட்டி அனுப்புகிறார்கள். பிரிட்டிஷ் ராணுவத்தின் 13, 7 மற்றும் 42 படைப்பிரிவுகள் ராஜ்மஹால் பகுதி மீது படையெடுப்பு நடத்தியது. அப்போது அவர்கள் சந்தித்த மகேஷ்தாஸ்தத்தா என்ற போலீஸ் அதிகாரி கொடூரமாக மக்களை கொன்று குவித்தான். ஒரு கட்டத்தில் ஒரு பெரும் கூட்டம் திரண்டு நின்றது. அங்கு வந்த மகேஸ்தாஸ்தத்தா தன்னை கண்டவுடன் கூட்டம் பயந்துவிடும், என்று எண்ணி வரியை கட்டபோகிறீர்களா! இல்லையா? என்று குதிரை யில் உட்கார்ந்து கொண்டு அதிகாரத்துடன் கொக்கரித்தான். அங்கே வீறுகொண்டு வந்த ஒரு போராட்டக்காரர் ஒரு வாளினால் தத்தா வின் தலையை துண்டாக்கி வீசுகிறார். இவ்வாறு வீரமிகு காவியங்கள் இப்போராட்டத்தில் ஏராளம் இயற்றப்பட்டன. அடக்குமுறையால் 36 சந்தால் கிராமங்கள் அழிக்கப்பட்டன.

இந்த போராட்டத்தை பற்றி வெள்ளைக் காரர் ஆசிரியர் எம்.எஸ்.ஓ. மேலி என்பவர் பின்வருமாறு கூறுகிறார். ”…45 சந்தால் வீரர்கள் ஒரு மண் குடிசையில் இருக்கிறார் கள். அவர்களை வெள்ளைக்கார சிப்பாய் கள் சூழ்ந்து குண்டு வீசி சுடுகிறார்கள். குடிசை யில் இருக்கும் வீரர்களை சரணடையச் சொல் கிறார்கள். அவர்கள் சரணடையவில்லை. அதற்குப் பதிலாக அவர்கள் அம்புகளை எய்துகொண்டே இருக்கிறார்கள். துப்பாக்கிக் கும் அம்புக்கும் சண்டை நடக்கிறது. கடைசி யாக துப்பாக்கிகளால்தான் வெல்ல முடியும். ஏனென்றால் நான்கு புறமும் துப்பாக்கியுடன் நிற்கிறார்கள். கடைசி வரைக்கும் சரணடைய முடியாது எனக்கூறி  அனைத்து உழவர்களும் அம்புகளை எய்து எய்து போராடி வீரமரணம் எய்துகின்றனர். குடிசைக்குள் கடைசியாக ஒரே ஒரு விவசாயி எஞ்சி இருக்கிறான். நீ சரணடை என்று ஒரு சிப்பாய் அழைக்கிறான். ஆனால் அந்த வயதான சந்தால் விவசாயி கூட அந்த சிப்பாய் மேல் பாய்ந்து கோடாரியால் அவனை வெட்டிக்கொன்று விட்டு தானும் மாண்டுபோகி றான். ராஜ்மஹால் பகுதியில் நடந்த போராட் டத்தில் 50,000 பேர் கலந்து கொண்டு 30,000 பேர் இறந்தனர். சந்தால் விவசாயிகள் போராட்டத்தில் விவசாயிகள் எப்படி கைது செய்யப்பட்டார்கள் என்பதற்கு வெள்ளைக்காரர்களின் சில கோப்பு கள் ஆதாரமாக இருக்கிறது. அவர்களில் கே. தத்தா சொல்வதாவது “52 கிராமங்களைச் சேர்ந்த 250 கைதிகளை ஒரே நேரத்தில் சந்தால் பர்கானா கமிஷனர் விசாரிக்கிறார்.  அதில் 2 கை திகள் அரசுக்கு ஆதரவாக மாறி விடுகிறார்கள். 3 பேர் விடுதலை செய்யப்படுகிறார்கள். மீதமுள்ள 245 பேர்களில் 9 வயது, 10 வயதில் 46 பேர் இருக்கிறார்கள்.” தில்லி விவசாயிகள் போராட்டத்தில் எப்படி பாலகர்கள் கலந்து கொண்டார்களோ இதை ஒத்த நிகழ்வு 1850களி லேயே நடந்துள்ளது. 

இப்போது நடந்து முடிந்த விவசாயிகள் போராட்டத்திலும், உயிர் நீத்தவர்கள் பற்றி எந்த கணக்கும் இல்லை என ஒன்றிய அரசு அறி வித்தது. இத்தகைய நிலை 1800களிலும்  நிலவி யது. அந்த சமயத்தில் கொல்லப்பட்ட விவசாயி கள் பற்றி தோட்ட முதலாளிகளுக்கு கவர்னர் ஜெனரல் ஒரு அறிக்கை கொடுக்கிறார். 1810 ஜூலை 13 அன்று அவுரி சாகுபடியில் இறந்த விவசாயிகள் பற்றி கூறும்போது, சட்ட ரீதி யான வார்த்தைகளில் கொலை என்று குறிப்பிட முடியாவிட்டாலும் ஆட்சியாளர்களின் பலாத் காரமே பூர்வகுடி விவசாயிகளின் மரணத்திற்கு  காரணமாக இருந்தன என அறிக்கை கூறு கிறது. தற்போதைய  கார்ப்பரேட்டுகள் போல் அந்த காலத்தில் தோட்டமுதலாளிகள் விவ சாயிகளின் சாவுக்கு காரணமாக இருந்திருக்கி றார்கள். கவர்னர் ஜெனரலின் அறிக்கைப்படி தோட்ட முதலாளிகள் அடிமைகளுக்கான மேஸ்திரி வேலையை முன்பு செய்தவர்கள் ஆவர். 

சுதந்திரத்திற்கு முந்தைய விவசாயிகள் போராட்டத்தை தொகுத்தால்,

l    1830 துவக்கத்திலேயே வெள்ளை யர்களை எதிர்த்து மைசூரின் ஒரு பகுதியில் சதார்மல்லா (விவசாயிகளின் அரசு) அமைக் கப்பட்டது.

l    1855இல் சந்தால் விவசாயிகள் வெள்ளையரை நாட்டை விட்டு ஓடும்படியும் நாட்டை தங்கள் கைவசப்படுத்த போவதாகவும், தங்கள் அரசை அமைக்கப்போவதாகவும் கூறி ஒரு மக்கள் ராணுவத்தை அமைத்தனர். 

l    1860 ஏப்ரலில் இந்திய விவசாயி கள் வரலாற்றில் முதல் பொது வேலை நிறுத்தத்தை நடத்தினர்.

வரலாற்றை பட்டியல்படுத்துகிறபோது 1855-56இல் நடந்த சந்தால் விவசாயிகளின் போராட்டம், 1860இல் வங்க மாநில அவுரி சாகுபடி சம்மந்தமான போராட்டம், 1875-76இல் கந்துவட்டி கடன் பத்திரம், புரோ நோட்,  கிரய பத்திரம் இவைகளுக்கு எதிராக மராட்டிய விவசாயிகள் நடத்திய போராட்டம், 1836-96இல் கேரள மாப்ளா விவசாயிகள் போராட் டம், 1872 பாப்னா ஃபோக்ரோ போராட்டம் ஆகியவை தெலுங்கானா, தேபாகா போராட் டங்களுக்கு இணையான முக்கியத்துவம் பெற்றவையாகும்.  இந்தியாவில் தொழில்துறை என்பது துவங்கவில்லை. எந்த தொழிற்சங்கமும் இல்லை. இந்தியாவில் விடுதலை போராட்ட தலைவர் என்பது அப்போது யாரும் கிடை யாது. எந்த அரசியல் கட்சியும் கிடையாது. இருந்தாலும்கூட  விவசாயிகள் தாங்களாக எந்தவித இராணுவப் பயிற்சியும் இன்றி தங்கள் தலைமையை தாமே தேர்வு செய்து போராடினர். வெள்ளையர்கள் அந்த போராட் டத்தை அடக்க முடியாமல் தடுமாறினார்கள். 

இத்தகு போராட்டங்களால்தான் வெள் ளைக்கார அரசு பல கமிஷன்களை அமைத்தது. தக்காண கலக விசாரணைக் கமிஷன், நிலவரி கமிஷன் உள்ளிட்டவை அமைக்கப்பட்டன. தக்காண விவசாய நிவார ணச் சட்டம் 1879ல் உருவாக்கப்பட்டது. அன்றைக்கு நீதிமன்றங்களுக்கு எதிராகவும் விவசாயிகளின் போராட்டம் அமைந்தது. இதைப்பற்றி அகமது நகர் கலெக்டர் டைட்லர் எழுதுகிறார். வெறும் கையெழுத்தை வாங்கிய மொட்டை பத்திரங்களை நிறை யப்பேர் பதுக்கி வைத்திருந்தனர். இந்த பத்தி ரத்தின் உள்ளடக்கம் என்னவென்றே கைநாட்டுப் போட்டவர்களுக்கு தெரியாது. நீதி மன்றங்களும் மார்வாடிகளுக்கு ஆதரவா கவே உள்ளன. மோசமான கொள்ளைக்கார கொடும் வட்டி வாங்கும் முதலாளிகளுக்கு சிவில் நீதிமன்றங்கள் ஆதரவாக உள்ளது என்று டைட்லர் எழுதுகிறார். 

ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரு மகத்தான போராட்டம் நடந்திருக்கிறது. ஏட றிந்து கணினி யுகத்திற்கும் மாறிய உலக அரங்கில் உலகளாவிய ஆதரவை பெற்றது விவசாயிகளின் இந்த போராட்டமே ஆகும். இந்தியா மட்டுமல்ல, உலகமே எஃகுவின் ஒற்றுமையோடு நடத்தப்பட்ட இந்த போராட் டத்தால் பாடம் பெற்றுள்ளது. கத்தியின்றி ரத்தமின்றி நடந்த யுத்தம் என பாட்டு வரிகளால் இந்த போராட்டத்தை முடிக்க முடியாது. 700க்கு மேற்பட்டோர் மாண்டுபோயினர். இப்போராட்டத்தில் விவசாயிகளே வென்றனர். அவர்கள் பர்வதத்தின் உச்சியிலே சூரிய தீபத்தை ஏற்றி உள்ளனர். பைபிளிலே ஒரு வசனம் வரும். திமிங்கலங் கள் கூட கொங்கைகளை நீட்டித் தங்கள் குட்டிக ளுக்குப் பால் கொடுக்கும். என் ஜனமாகிய குமாரத்தியோ வனாந்தரத்திலுள்ள தீக்குருவி யைப் போல் குரூரமாயிருக்கிறாளே! இந்த வசனத்தைப் போலவே மோடி அரசின்  அணுகுமுறை பாராமுகமாக இருந்தது. ஆனால் விவசாயிகள் தக்க பாடத்தை புகட்டி விட்டுத்தான் வீடு திரும்பியிருக்கிறார்கள். 

;