சென்னை, ஏப்.18- நாடுகள் இடையிலான நல்லெண்ணத்தை உருவாக் கும் பண்பாட்டு பிரதிநிதி எனும் பெயரில் 45ஆவது மாஸ்கோ சர்வதேச திரைப் பட விழாவில், ரஷ்ய அரசின் சர்வதேச திரைப்பட விழா துறையின் அழைப்பை ஏற்று ஏப்ரல் 20ஆம் தேதி திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி மாஸ்கோ செல்கி றார். இந்த விழாவின் உலக சினிமா பிரிவில் விஜய் சேது பதி, காயத்ரி, குரு சோமசுந்த ரம், ஷாஜி நடித்து திரைய ரங்குகள் மற்றும் ஆகா ஓ.டி.டி தளத்தில் வெளியான ‘மாமனிதன்’ திரைப்படம் திரையிடப்படுகிறது. திரைப்படங்களின் மூல மாக, சமூக வளர்ச்சிக்கான செய்திகளை அழகியல் நேர்த்தியோடு தொடர்ச்சி யாக தந்து கொண்டிருக்கும் திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைவர்களை சந்தித்து வாழ்த்துப் பெறு வதற்காக சென்னை தி.நகரி லுள்ள மாநிலக் குழு அலுவல கத்திற்கு செவ்வாயன்று (ஏப்.18) வருகை தந்தார். அவரை கட்சியின் மாநி லச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத், மாநிலக்குழு உறுப்பினர் வெ.ராஜசேகரன் ஆகியோர் வரவேற்று சால்வை அணி வித்து வாழ்த்து தெரிவித்த னர். அப்போது, மேலும் சிறந்த திரைப்படங்களை தயாரித்து மென் மேலும் புகழ்பெற வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். இச்சந்திப்பின் போது தமு எகச தலைவர்களில் ஒருவ ரான இரா.தெ.முத்து உட னிருந்தார்.