தைவானுடனான தூதரக ரீதியான உறவுகளை முறித்துக் கொள்வதாக நிகரகுவா அறிவித்தி ருக்கிறது. ஒரு சீனா என்ற கொள்கையை ஏற்றுக் கொள்ளும் நிகரகுவா, அதை மேலும் நடைமுறைப் படுத்தும் வகையில் இந்த உறவுகளை நிறுத்திக் கொள்வதாக முடிவெடுத்துள்ளது. இது குறித்து அதிகார பூர்வமாக நிகரகுவா வெளியுறவுத்துறை அமைச்சகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சீனாவும், தைவானும் ஒட்டுமொத்த சீனத்தின் பகுதிகளாகும்” என்று கூறி யிருக்கிறது.
அமெரிக்க ஆயுதங்கள் இருந்தால் அதை அழித்து விடுங்கள் அல்லது கிடங்குகளில் வையுங்கள் என்று தன் நாட்டு ராணுவத்திற்கு கம்போடிய பிரதமர் ஹன் சென் அறிவுறுத்தியுள்ளார். கிழக்கு ஆசிய நாடான கம்போடியா மீது ஆயுதங்கள் தொடர்பான தடையை அமெரிக்கா போட்டியிருப்பதே இதற்குக் காரணமாகும். கிழக்கு ஆசிய நாடுகளை அச்சுறுத்த, ராணுவப் பயிற்சி நடத்தி வந்த தளத்தை கம்போடியா அழித்துவிட்டதால் தடை விதிக்கப்பட்டது.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு, பிப்ரவரி 1, 2021 அன்று தனது ஆட்சியை மியான்மர் ராணுவம் அமைத்துக் கொண்டது. அதற்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களை சிறைப்படுத் தும் பணியை ராணுவம் செய்தது. இந்தப் பணியால் ஆயி ரக்கணக்கான ராணுவ வீரர்கள் அதிருப்தி அடைந்திருப்ப தாகவும், பலர் ராணுவத்திலிருந்து வெளியேறியிருப்ப தாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.