tamilnadu

img

மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு விசைத்தறி வேலை நிறுத்தம் தொடங்கியது பல கோடி ரூபாய் துணி உற்பத்தி பாதிப்பு

திருப்பூர், செப். 16 - சாதா விசைத்தறிக்கு விதிக்கப் பட்ட மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை துவக்கினர். இதனால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள விசைத்தறி துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு செப்டம்பர் 10ஆம் தேதி  முதல் நடைமுறைக்கு வந்துள் ளது. இந்த கட்டண உயர்வு அறிவிக்கப் பட்ட போதே பல்வேறு தரப்பினரும் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்று கருத்துத் தெரிவித்திருந்தனர். கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சோமனூர், பல்லடம், மங்கலம், அவிநாசி, தெக்கலூர், புதுப்பாளையம், பெருமாநல்லூர் உள்ளிட்ட பகுதி களில் செயல்படக்கூடிய கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமை யாளர்களும் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்று கோரிக்கை விடுத்தனர். கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கத்தினர் நேரடியாக சென்னைக்குச் சென்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்தும் மின் கட்டண உயர்வை கைவிடுமாறு கேட்டுக் கொண்டனர். எனினும், அரசு மின் கட்டணத்தை உயர்த்தி அறிவித்தது. இதையடுத்து கோவை, திருப்பூர் மாவட்ட விசைத் தறி உரிமையாளர் சங்கத்தினர் வியாழக் கிழமை பொதுக் குழுவைக் கூட்டி விவா தித்தனர். இதில் மின் கட்டண உயர்வை கைவிட வலியுறுத்தி செப்டம்பர் 16ஆம் தேதி வேலை நிறுத்தப் போரா ட்டத்தை தொடங்குவதாக அறிவித்த னர். மேலும் உயர்த்தப்பட்ட மின் கட்ட ணத்தை செலுத்துவதில்லை என்றும் ஏகமனதாக முடிவு செய்துள்ளனர்.

விசைத்தறிகள் நிறுத்தம்

இதன்படி சோமனூர், தெக்கலூர், புதுப்பாளையம், அவிநாசி, பெருமா நல்லூர் உள்பட இரு மாவட்டங்களைச் சேர்ந்த கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் வெள்ளிக் கிழமை காலை 6 மணி முதல் விசைத்தறி களை நிறுத்தினர். இந்த வட்டாரங் களில் எப்போதும் கேட்டுக் கொண்டி ருக்கும் தறிச் சத்தம் நிசப்தமானது. இது குறித்து கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கப் பொருளாளர் பூபதி கூறுகையில், ஏறத்தாழ 20 ஆயிரம் விசைத்தறி உரிமையாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்று விசைத்தறிகள் இயக்கத்தை நிறுத்தியுள்ளனர். 2 லட்சம் தறிகள் நின்று போயுள்ளன. இதனால் நாளொன்றுக்கு ரூ.50 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி முடங்கியுள்ளது. ஆங்காங்கே ஓரிரு விசைத்தறிகள் இயங்கிக் கொண்டிருக்கலாம். அவை யும் அடுத்த ஒரு சில நாட்களில் முழு மையாக தங்கள் இயக்கத்தை நிறுத்தி விட்டு இந்த வேலை நிறுத்தத்தில் பங்கே ற்பார்கள் என்று அவர் கூறினார்.

நெருக்கடியின் சுமை

பருத்தி நூல் விலை அபரிமித மாக உயர்ந்திருக்கும் நிலையில் ஏற்கெனவே விசைத்தறி துணி உற்பத்தி பாதிக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மின் கட்டணமும் உயர்த்தப் படுவது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச் சுவதாக இருக்கிறது. நெருக்கடிக்கு இடையே சாதா விசைத்தறிகளை இயக்கி பிழைத்து வருகிறோம். மென்மேலும் நெருக்கடியின் சுமை அதி கரிப்பதால் இந்த தொழில் அழிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. இதைக் காப்பாற்றுவதற்கு போராடு வதைத் தவிர எங்களுக்கு வேறு  வழியில்லை என்று விசைத்தறி யாளர்கள் கூறினர். இதற்கிடையே தமிழ்நாடு விசைத்தறிகள் சங்க கூட்டமைப்பினர் வரும் ஞாயிற்றுக்கிழமை சுக்காம்பா ளையத்தில் கூடி மின் கட்டண உயர்வுப் பிரச்சனையில் மேற்கொள்ள வேண்டிய நிலைபாடு குறித்து விவா திக்க உள்ளதாக கூட்டமைப்பின் செய லாளர் இரா.வேலுச்சாமி தெரிவித்தார். விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கி யுள்ள நிலையில், மின் கட்டண உயர்வை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் பி.முத்துசாமி கேட்டுக் கொண்டார்.


 

;