மதுரை:
மதுரை செக்கானூரணி அருகே உள்ள பன்னியான் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பன்னியான் பகுதி முகாம்அமைப்பாளராக உள்ளார். இவரை அவரது கிராமத்தில் வைத்து முத்துசாமித்தேவர் மகன் ராமச்சந்திரன், கொடிப்புலி, பாண்டி, நாகராஜ், லட்சுமணன் மகன் வேல்முருகன், ஜெயராஜ் மகன் சிவபாண்டி, அம்சமணி மகன் காசிவிஸ்வநாதன், கொசவபட்டி கணேசன், மாயாண்டி மகன் வயக்காடு, ராமநாதன் மகன்கள் வயக்காடு, ஆனந்த் ஆகியோரும் மற்றும் அடையாளத் தெரியாத நபர்களும் சேர்ந்து செந்தில்குமார் முகத்தை சிதைத்ததோடு, தலை,முகம், கழுத்தில் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் எனதுகணவர் இறந்துவிட்டார். எனது கணவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதற்கு ஆதிக்க சாதியினரின் சாதிவெறியும், முன் பகையும தான் காரணம். சம்மந்தப்பட்ட அனைவர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ்வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனஅவரது மனைவி எஸ்.நாகஜோதி செக்கானூரணி காவல்நிலையத்தில் புகாரளித்தார்.
புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்றகாவல்துறையினர் செந்தில்குமார் உடலை கைப்பற்றி உடற்கூராய்‘விற்காக அனுப்பி வைத்தனர். 12 பேர் மீது147, 148,149, 302 மற்றும் வன்கொடுமை தடுப்புப் பிரிவின் கீழ்வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் அவர் களை தேடி வருகின்றனர். படுகொலை செய்யப்பட்ட செந்தில்குமாருக்கு பிரசிந்தா (12), நிஷாந்த் (7), பிரனிஷா(4) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளன.