tamilnadu

img

பகுத்தறிவு பகலவனுக்கு சிபிஎம் மரியாதை...

சாதிக்கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை உள்ளிட்டவற்றுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய பெரியாரின் நினைவு தினத்தையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத் சனிக்கிழமை (டிச. 24) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.முருகேஷ், இ.சர்வேசன், இரா.முரளி, கே.முருகன், வெ.ஆறுமுகம், பகுதிச்செயலாளர் கவிதா கஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.