திருவனந்தபுரம், பிப். 21 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில 24-ஆவது மாநாடு திரு வனந்தபுரத்தில் மார்ச் 6 முதல் 9 வரை நடைபெறுகிறது. இதற்கான முன்னோட்ட நிகழ்வுகள் புதனன்று (பிப்ரவரி 19) துவங்கின. இதை முன்னறிவிக்கும் விதமாக கட்சி யின் மாநிலத் தலைமையகத்தில் அமைக்கப் பட்டிருந்த கொடிமரத்தில், மாநிலச் செயலா ளர் எம்.வி. கோவிந்தன் கட்சியின் செம் பதாகையை உயர்த்தி மாநாட்டின் முன் னோட்ட நிகழ்வுகளைத் துவக்கிவைத்தார். இந்த மாநாட்டிற்காக சிறப்பு முறையில் வடிவமைக்கப்பட்ட பதாகைகளில், கட்சியின் திருவனந்தபுரம் மாவட்ட உறுப்பினர்கள் 52 ஆயிரத்து 600 பேரின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன. கடந்த மாநாடு நடைபெற்ற திருச்சூர் மாவட்டத்தி லிருந்து மட்டும் 24 பதாகைகள் கொண்டு வரப்பட்டு, முன்னோட்ட துவக்க நிகழ்ச்சியில் உயரப் பறந்தன. மாநாட்டு அரங்கம் முழுமையும் செம்பதாகைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.