tamilnadu

img

விவசாயிகளுக்கு ஆதரவாக சிபிஎம் ஆர்ப்பாட்டம்...

மதுரை:
மதுரை மாநகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தில்லியில் விவசாய திருத்த சட்ட மசோதா, மின்சார திருத்தசட்ட மசோதா ஆகியவைகளை மத்திய மோடி தலைமையிலான பாஜக அரசு திரும்ப பெறவேண்டும் என்று போராடி வரும்விவசாயிகளுக்கு ஆதரவாகவும் இச்சட்டங்களை திரும்ப பெறவேண்டும் என்றும் மாநகர் மாவட்டச் செயலாளர் இரா. விஜயராஜன் தலைமையில் தெற்குமாசி - மேலமாசி வீதி சந் திப்பு டி. எம். கோர்ட் அருகில்திங்களன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் மதுரைமக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மாநில செயற் குழு உறுப்பினர் க.கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலா ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டு ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

மதுரை புறநகர்
மதுரை புறநகர் மாவட்டம்கிழக்கு தாலுகா குழு சார்பில்ஒத்தக்கடை பாரத் ஸ்டேட் வங்கி முன்பு மறியல் நடைபெற்றது. இந்த மறியலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கே.பொன்னுத்தாய், மாவட்டச் செயற்குழுஉறுப்பினர் எஸ்.பி.இளங்கோவன், தாலுகாச் செயலாளர் எம்.கலைச்செல்வன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.மாயாண்டி,வி.பிச்சைராஜன், மு.பாலுச் சாமி, தாலுகாக் குழு உறுப்பினர்கள் நல்.மூர்த்தி, ஆர்.மனோகர், கே.எம்.முருகன், பி.தனசேகரன், கே.சேகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு தாலுகாச் செயலாளர் ஆர்.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில் கட்சியின் புறநகர்மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், கே.ராஜேந்திரன், கே.அரவிந்தன், பா.ரவி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் பொன்கிருஷ்ணன், விஜயாஉட்பட பலர் கலந்து கொண்டனர்.

அருப்புக்கோட்டை
மத்தியில் ஆளும் பாஜக அரசுகொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி தலைநகர் டெல்லியில்குவிந்துள்ள விவசாயிகள் வீரம்செறிந்த மகத்தான போராட் டத்தை நடத்தி வருகின்றனர். அப்போராட்டத்திற்கு ஆதரவாகவும், விவசாயத்தை கார்பரேட் மயமாக்கும் வேளாண் சட்டத்தை உடனடியாக திரும்பபெற வலியுறுத்தியும் அருப்புக் கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.அருப்புக்கோட்டையில் இந்தியன் வங்கி முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் தலைமையேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.முத்துக்குமார், வி.முருகன், ஆர்.சந்திரமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இதில், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.காத்தமுத்து, எம்.கணேசன், அம்மாசி, அன்புச் செல்வன், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் எம்.ஜெயபாரத், மாணவர் சங்க மாவட்டதலைவர் கே.சமயன் ஆகியோர்உட்பட பலர் பங்கேற்றனர்.

இராஜபாளையம்
சிபிஎம் சார்பில் இராஜபாளையத்தில் ஸ்டேட் பேங்க்முன்பு முற்றுகைப் போராட்டம்நடைபெற்றது. நகரச் செயலாளர் பி. மாரியப்பன் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் சுகந்தி, மாவட்ட செயலாளர் கே அர்ஜுனன் ஆகியோர்பேசினர்.மாவட்ட செயற்குழுஉறுப்பினர் குருசாமி, மாவட் டக்குழு உறுப்பினர்கள் கணேசன், ராமர், ஜோதிலட்சுமி, தமிழக விவசாயிகள் சங்கதலைவர் என்.ஏ.ராமச்சந்திரராஜா,சிபிஎம் மேற்கு ஒன்றியசெயலாளர் தங்கவேல், கிழக்குஒன்றிய செயலாளர் முனியாண்டி, திருவில்லிபுத்தூர் நகரச் செயலாளர் ஜெயக்குமார். ஒன்றிய செயலாளர் சசிகுமார் உட்பட பங்கேற்ற 52 பேர் கைதுசெய்யப்பட்டனர்.