தென்காசி, அக் .13- ஊரக உள்ளா ட்சித் தேர்தலில் தென்காசி மாவட்டம், நெட்டூர் ஊராட்சி மன்றத் தலைவருக்கு போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ராஜேஸ்வரி 741 வாக்குகள் பெற்று, வெற்றி பெற்றார். இவர் மறைந்த சிஐடியு முதுபெரும் தலைவர் ம.ராஜாங்கத்தின் மருமகள் ஆவார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட 6 பேரும் டெபாசிட் இழந்தனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.வேல்முருகன், சிஐடியு சங்கத்தினர் டாடா சுமோ ராஜ், லெனின்குமார், பாலு, மகா விஷ்ணு, தர்மகனி ஆகியோர் வெற்றிபெற்ற ராஜேஸ்வரிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். ராஜாங்கத்தின் மனைவி சரஸ்வதி அம்மாள், ராஜேஸ்வரியின் பெற்றோர் ஆகியோர்உடனிருந்தனர்.