tamilnadu

img

நாங்குநேரி பேரூராட்சியில் சிபிஎம் வேட்பாளர் போட்டியின்றி தேர்வு

திருநெல்வேலி, பிப். 7 - நெல்லை மாவட்டம் நாங்குநேரி பேரூராட்சி 4ஆவது வார்டில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் பி.எம்.முருகன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நெல்லை மாவட்டக்குழு அலுவலகத்தில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார், அருகில் மாவட்டச் செயலாளர் க.ஸ்ரீராம். மாநில குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.எஸ். துரைராஜ், என்.எஸ். கணேசன் ஆகியோர் உள்ளனர்.