முத்தமிழ் அறிஞர் கலைஞர் பல்கலைக்கழக கட்டுமான பணிக்கான இடம்
சட்டபேரவை தலைவர் ஆய்வு
கும்பகோணம், மே 9- தமிழ்நாடு முதல்வர் சட்டமன்றப் பேரவையில் கும்பகோணத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் பல்கலைக் கழகம் அமைக்கப்படும் என்று அறிவித்ததைத் தொடர்ந்து, அரசு இயந்திரங்கள் மற்றும் எம்எல்ஏ, உயர்கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் இடம் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில், கும்பகோணத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் பல்கலைக் கழகம் அமைப்பது தொடர்பாக கும்பகோணம் அருகே, மருதாநல்லூரில் இடம் தேர்வு செய்வது குறித்து, தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்நிகழ்வில் உயர்கல்வித் துறை செயலர் சி.சமயமூர்த்தி, கல்லூரிக் கல்வி இயக்ககம் ஆணையர் எ.சுந்தரவல்லி, தஞ்சை மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம், மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி.ஆர்.சுதா (மயிலாடுதுறை), முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.