tamilnadu

img

என்டிசி பஞ்சாலைகள்-தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்ட தொழிலாளர்கள்

கோவை, டிச.24–   இரண்டு மாத காலமாக ஊதியம் வழங்காமல் இழுத்தடிக்கும் என்டிசி பஞ்சாலை நிர்வாகத்தைக் கண்டித்து கோவையில் வெள்ளியன்று தொழி லாளர்கள், தொழிற்சங்கத்தினர்  என்டிசி  ஆலைகள் மற்றும் தலைமை அலு வலகத்தை முற்றுகையிட்டு போராட்ட த்தில் ஈடுபட்டனர்.  ஒன்றிய அரசின் தேசிய பஞ்சாலைக் கழகமான என்.டி.சி. சார்பில் நாடு முழு வதும் 23 ஆலைகள் இயங்கி வரு கின்றன. இதில் தமிழகத்தில் 7 ஆலைகள் இயங்கி வருகின்றன. இதில் கோவை யில் மட்டும் 5 ஆலைகள் உள்ளன.  இந்த ஆலைகள் கடந்தாண்டு மார்ச் 24 ஆம் தேதி கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு காரணமாக முழுமையாக அடைக்கப்பட்டது. இதன்பின் ஆலைகளை இயக்க என்டிசி நிர்வாகம் முன்வரவில்லை. ஆகவே, இந்த ஆலைகளை மீண்டும் இயக்கக் கோரி தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

 இந்நிலையில் பஞ்சாலையை இயக்காத இந்த காலத்திற்கு அதிகாரி களுக்கு முழுச் சம்பளமும், ஊழியர் களுக்கு பாதி சம்பளமும் வழங்கப்பட்டு  வந்தது. அதுவும் பல மாதங்கள் குறிப்பிட்ட தேதியில் ஊதியம் வழங்கா மல் இழுத்தடித்து வந்த நிலையில் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து போரா ட்டம் நடத்திய பிறகு ஊதியம் குறிப்பிட்ட தேதியில் வழங்கப்பட்டு வந்தது.  இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக ஊழியர்களுக்கு பாதி சம்பளமும் வழங்கப்படவில்லை. இதுகுறித்து நிர்வாகத்திடம் தொழிற்சங்க தலை வர்கள் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் என்டிசி நிர்வாகம் மேற்கொள்ளவில்லை.  இதனையடுத்து வெள்ளியன்று கோவையில் உள்ள 5 என்டிசி ஆலை களையும் தொழிலாளர்கள் முற்றுகை யிட்டு, போராட்டத்தை நடத்தினர்.  கோவை காட்டூரில் உள்ள என்டிசி  தலைமையகத்தை சங்க வித்தியாச மின்றி அனைத்து தொழிற்சங்க தலை வர்கள் தலைமையில் தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஜன.5 இல் பெருந்திரள் முறையீடு

இது குறித்து சேவ் என்.டி.சி  அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பா ளரும், சிஐடியு மாவட்ட தலைவரு மான சி.பத்மநாபன் செய்தியாளர்களி டம் கூறுகையில், கொரோனா காலம் காரணமாக மூடப்பட்ட பஞ்சாலைகளை திறந்து தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என இரண்டு முறை ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து  முறையிட்டோம். இதுவரை எந்தவித மான முன்னேற்றமும் இல்லை.   இந்நிலையில்  தற்போது ஊழியர் களுக்கான ஊதியத்தையும் தராமல் நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது. ஆகவே, அனைத்து என்டிசி பஞ்சாலை களையும், தொழிலாளர்கள் முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தலைமை அலுவலகத்தை தொழிற்சங்க தலைவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். ஊதியம் வழங்கும் தேதியை நிர்வாகம் உறுதியளிக்காத வரையில் போராட்டத்தை கைவிடுவதில்லை என  முடிவெடுத்திருக்கிறோம் என்றார்.  மேலும், கோவையில் வருகிற ஜனவரி 4 ஆம் தேதி சேவ் என்.டி.சி.  அமைப்பு கூடி ஆலோசிக்க உள்ளது.  ஜனவரி 5 ஆம் தேதியன்று தொழிற் சங்கங்களை இணைத்து பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளோம்.  இதில்  மகாராஷ்டிரா, குஜராத், மேற்கு வங்கம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பஞ்சாலை தொழிற்சங்கத்தினர் கலந்து கொள்ள உள்ளனர். ஆகவே, தங்களது போராட்டத்திற்கு பொதுமக்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். 

பேச்சுவார்த்தை- ஊதியம் வழங்க உறுதி

இதற்கிடையே, என்டிசி ஆலை களை தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து என்டிசி நிர்வாகம் வேறுவழியின்றி தொழிற்சங்க தலைவர்களை அழைத்து  பேச்சுவார்த்தை நடத்தியது.  இதில் நிலுவை ஊதியத்தை வருகிற வெள்ளிக்கிழமைக்குள் வழங்கு கிறோம் என்கிற உறுதியை அளித்த னர். இதனையடுத்து நான்கு மணி நேர மாக நடைபெற்ற முற்றுகை போராட்ட த்தை கைவிட்டு தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.

 

;