tamilnadu

img

தொழிற்சங்க இலக்கணம் தோழர் ஜே. ஹேமச்சந்திரன்

தோழர் ஜே. ஹேமச்சந்தி ரன் மிகச் சிறந்த தொழிற்சங்கவாதியாகத் திகழ்ந்த வர். இந்தியத் தொழிற்சங்க மையத் தில் பல்வேறு பொறுப்புகளில் திறம்படப் பணியாற்றியவர். தமிழ்நாட்டில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  முன்னணித் தலைவராகத் திகழ்ந்தார். 1980, 1984,  1989 மற்றும் 2001இல் திருவட்டாறு தொகுதியில் இருந்து தமிழ்நாட்டின் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டார். சட்டமன்றத்தில் சிபிஐ (எம்)  குழுவின் தலைவராகவும் பணி யாற்றினார். திருவனந்தபுரத்தில் அவரது கல்லூரிப் படிப்புகளின்போதே அரசியலில் தீவிரமாக இருந்தார். 1952 இல் அவர் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் உறுப்பினராகச் சேர்ந்தார்.  1962 ஆம் ஆண்டில் நாகர் கோவிலில் கட்சியின் முழுநேர ஊழி யர் ஆனார். தோட்டத் தொழிலாளர் கள் மத்தியில் பணியாற்றினார். 1964இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமானபோது அதில் தம்மை இணைத்துக் கொண்டார். இந்திய தொழிற்சங்க மையம் அமைக்கப்பட்டபோது, அவர் மாநி லத்தில் ஒரு முன்னணித் தலைவ ராகத் திகழ்ந்தார். தேயிலை, ஜவுளி, தோட்டத் தொழிலாளர்கள், மற்ற வர்களின் போராட்டங்களை  வழி நடத்தினார்.  மாவட்டச் செயலாளர் மற்றும் சிஐடியு போக்குவரத்து தொழிலாளர் கூட்டமைப்பின் மாநில செயலாளர் பொறுப்பில் இருந்து திறம்படப் பணியாற்றினார். அவர் அனைத்து இந்திய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் துணைத் தலைவராகவும் ஆனார். 1978 ஆம் ஆண்டு சிபிஐ (எம்) தமிழ்நாடு மாநிலக் குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார், 1990 களில் அவர் சிஐடியு தமிழ்நாடு மாநிலக் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார். அவர் தேசிய ரப்பர் வாரிய உறுப்பினராகவும் இருந்தார். தமிழ்நாட்டில் கோகோ கோலா மற்றும் பெப்சி விற்பனை மீதான தடைக்காக போராடினார்.  மேலும் 2004 ஆம் ஆண்டு சுனாமிக்குப் பிறகு, ஜே. ஹேமச்சந்திரன் மாநி லத்தில் ஒருங்கிணைந்த நிவாரண பணிக்காக பிரச்சாரம் செய்தார். 2008 பிப்ரவரி 8ஆம் நாள் திரு வனந்தபுரம் மருத்துவமனையில் காலமானார். தொழிற்சங்க இயக்கத்தில் அவரது பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. - பெரணமல்லூர் சேகரன்