tamilnadu

img

மனித குலத்தின் மனசாட்சி!

மக்களுக்காக உழைக்கும் இலட்சியப் பிடிப்போடு தோழர் பி.ராமச்சந்திரன் மாணவப் பருவத்திலேயே நாட்டு விடு தலைப் போரில் பங்கேற்றார். புரட்சி கர கம்யூனிஸ்ட் இயக்கத்தை கட்டு வதில் தன்னை முழுமையாக அர்ப் பணித்துக் கொண்டார். கிளைச் செயலாளரிலிருந்து அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் வரை பல பொறுப்புகளை வகித்தவர். “ஒரு கம்யூனிஸ்ட்டின் நினைவு குறிப்புகள்” நூலில் தோழர் பி.ராமச்சந்திரன் எழுதியுள்ள ஒரு  பகுதி வருமாறு: 1941 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக சேர்ந் தேன். எனது நீண்ட பயணத்தில் நான் பெற்ற அனுபவங்கள் ஏராளம். இயக்கங்களை உருவாக்கியது, பங்கேற்றது, கட்சியையும் வெகு ஜன அமைப்புகளையும் படிப்படி யாகக் கட்டி வளர்த்தது, ஆயிரக் கணக்கான தோழர்களுடன் மிக நெருக்கமாகப் பழகி அவர்களை ஊக்குவித்தது, ஏராளமான தோழர்களுக்கு அரசியல் கல்வி  புகட்டியது போன்ற அனுபவங்க ளைப் பெற்றேன். வசதிகளின்றி, வறுமைக்கும், அதனால் தோன்றும் இன்னல்க ளுக்கும் இடையே மனம் தளராமல் பணியாற்றிய அனுபவங்கள் பல. காவல்துறையின் அடக்குமுறை கள், சிறை வாழ்க்கை, தலை மறைவு வாழ்க்கை, வாழ்ந்த அனுப வங்கள் போன்றவற்றையும் சந்தித்துள்ளேன்.  அரசியல் சூழலின் மாற்றங்க ளையும் கண்டுள்ளேன். இந்த மாபெரும் இயக்கத்திற்கு ஏற்பட்ட தோல்விகள், எதிர்கொள்ளும் நெருக்கடிகள், பின்னடைவுகள் மத்தியிலும் நமது தோழர்கள் உறுதியாகவும் நம்பிக்கையுடனும் கட்சி பணியாற்றி வருவதைக் காண்கிறேன். கோடிக்கணக்கான மக்கள் கம்யூனிஸ்ட் இயக்கத்தை மனித குலத்தின் நம்பிக்கை நட்சத்திர மாக எண்ணுகிறார்கள். இந்த எண்ணம்தான் நமது வெற்றிக்கு ஆதாரமாக அமையும் என்பதில் ஐயமில்லை. பிரான்ஸ் நாட்டின் மிகப்பெரும் எழுத்தாளரும், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைவ ருமான கெப்ரியல் பெரி எழுதிய ஒரு கடிதத்தில் “கம்யூனிசம் மனித குலத்தின் மனசாட்சியாகும்” என்ற ஆழமான பொருள் பொதிந்த கருத் தினை எழுதினார். அவர் நாஜிக ளால் விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்நோக்கியி ருந்த போதுதான் இதை வரைந் தார்.  மறக்க முடியாத அந்த மகத் தான சொற்களைப் படித்த நாளில் இருந்து என் மனதில் ஒலித்துக் கொண்டேயிருந்தது.

பெரணமல்லூர் சேகரன்

;