tamilnadu

img

கம்யூனிஸ்ட் கூட்டணி வேட்பாளர் போரிக் மாபெரும் வெற்றி

சாண்டியாகோ, டிச.21- தென் அமெரிக்க நாடுகளில் ஒன் றான சிலியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆத ரவு பெற்ற காப்ரியல் போரிக் வெற்றி பெற்றுள்ளார். மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் தொடர்ந்து இடது சாரித் தலைவர்கள் மற்றும் கட்சிகள் ஆட்சியைக் கைப்பற்றி வருகின்றன. அதன் தொடர்ச்சியாகவே சிலியில் போரிக் வெற்றி பெற்றிருக்கிறார். சிலியின் ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான முதல் சுற்றுத் தேர்தல் நவம்பர் 21 ஆம் தேதியன்று நடைபெற் றது. ஏழு வேட்பாளர்கள் போட்டி யிட்ட அந்தத் தேர்தலில் எந்த வேட்பாள ருக்கும் 50 விழுக்காடு வாக்குகள் கிடைக் காததால் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த இடதுசாரி வேட்பாளர் காப்ரி யல் போரிக் மற்றும் வலதுசாரி வேட்பா ளர் அன்டோனியோ கஸ்ட் ஆகிய இரு வரும் டிசம்பர் 19 அன்று நடந்த இரண் டாவது சுற்றில் போட்டியிட்டனர்.

சிலி கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்து உரு வாக்கிய “நான் கவுரவத்தை ஏற்கிறேன்” என்ற பொருளுடைய கூட்டணியின் வேட் பாளராக காப்ரியல் போரிக் தேர்தலில் போட்டியிட்டார். கடந்த இரண்டு ஆண்டு களாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு களில் கிட்டத்தட்ட அனைத்திலுமே கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் டேனியல் ஜாட்யூதான் முதலிடத்தில் இருந்தார். ஆனால், கூட்டணியின் வேட் பாளராக போரிக் தேர்வு செய்யப்பட் டதை கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக் கொண் டதால், டேனியல் ஜாட்யூ போட்டியிலி ருந்து விலகிக் கொண்டார். சிலியின் ரிகோலெடா நகரின் மேயர் பொறுப் பேற்று பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் செல்வாக்கோடு இருப்பவர் டேனியல் ஜாட்யூ என்பது குறிப்பிடத்தக்கது.

போரிக் வெற்றி பெற்றால், சிலியின் ஆட்சி கம்யூனிஸ்டுகளின் கைகளில் சென்றுவிடும் என்ற வலதுசாரி வேட்பாளர் அன்டோ னியா கஸ்ட்டின் பிரச்சாரத்திற்கு அந்நாட்டு மக்கள் பதிலடி கொடுத் துள்ளார்கள். கம்யூனிஸ்ட் கட்சி யின் ஆதரவு பெற்ற வேட்பாளரைப் பெருவெற்றி பெறச் செய்துள்ள னர். முதல் சுற்றுத் தேர்தலில் இடது சாரி வாக்குகள் பிரிந்ததால் 28விழுக் காடு வாக்குகளுடன் அன்டோனி யோ கஸ்ட் முதலிடம் பெற்றிருந்தார்.  வாக்குப்பதிவு அதிகமானால் காப்ரியல் போரிக் வெற்றி உறுதி என்ற நிலையில், வாக்குப்பதிவைக் குறைக்க ஆட்சியாளர்கள் முயற் சித்தனர். பொதுப் போக்குவரத்தை வாக்குப்பதிவு நாளன்று நிறுத்தி விட்டார்கள். இதனால் சாதாரண மக்களில் பலர் வாக்களிக்க வில்லை. இந்த வாக்குகள் பெரும் பாலும் காப்ரியல் போரிக்குக்கு விழுந்திருக்க வேண்டிய வாக்குக ளாகும். இந்தத் தடையையும் தாண்டி இடதுசாரி வேட்பாளரை மக்கள் வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள்.

சால்வடார் அலெண்டேவுக்கு, சர்வாதிகாரி பினோசெட்டுக்கும் இடையில் நடந்த தேர்தல் போலவே இருந்ததாக மக்களில் சிலர் வர் ணித்துள்ளனர். அலெண்டேயின் கொள்கைகளை முன்னிறுத்த போரிக் வாக்குறுதி அளித்ததை யும், அமெரிக்க அதரவு சர்வாதி காரி பினோசெட்டின் கொடூர ஆட்சி யை நியாயப்படுத்தி அன்டோனி யோ கஸ்ட் பேசியதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

மக்கள் நலன்

அசமத்துவத்தைக் குறைக்கும் வகையில் குறைந்தபட்ச ஊதி யத்தை உயர்த்துவது, கல்வி மற்றும் மருத்துவச் செலவுகளைக் குறைப்பது, சமூகப் பாதுகாப்பு வளையத்தை விரிவுபடுத்துவது, சுற்றுச்சூழல் மாற்றத்திற்கு எதி ராகப் போரிடுவது உள்ளிட்ட பல்வேறு உறுதிமொழிகளை போரிக் மக்க ளுக்குத் தந்துள்ளார். 

சர்வாதிகாரி பினோசெட்டின் காலத்திய அரசியல் சட்டத்தை மாற்ற வேண்டும் என்ற மக்களின் எழுச்சிமிகு போராட்டத்தின் மூலம் முன்னுக்கு வந்த காப்ரியல் போரிக், புதிய அரசியல் சட்டத்தை இயற்றுவதற்கான காலவரம்பு நிறைவு பெறும் வேளையில் ஜனாதி பதியாகப் பொறுப்பேற்பார். அதில் பெண்கள் சமத்துவம், பழங்குடியி னர் உரிமைகள் மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு ஆகியவை பற்றிய அம்சங்கள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய ஜனாதிபதி செபாஸ் டியன் பினெராவிடம் தொலைபேசி யில் பேசிய போரிக், “கடுமையான சவால்கள் எதிர்நோக்கியுள்ளன. என்னால் என்ன முடியுமோ அதைச் செய்யப் போகிறேன். சிலியின் அனைத்து மக்களுக்குமான ஜனாதி பதியாக இருப்பேன்” என்று உறுதி யளித்துள்ளார்.
 

 

 

;