நாகர்கோவில், அக்.12- பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட அனைவரும் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என குமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் வலியுறுத்தினார். கன்னியகுமரி மாவட்டம், இரணியல் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அக்டோபர் 12 புதனன்று நடைபெற்ற சிறப்பு மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். நடைபெற்ற நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் பு.அலர்மேல் மங்கை, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) மைக்கேல் அந்தோணி பெர்னாண் டோ, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஷீலா ஜாண், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் (வேளாண்மை) வாணி, கல்குளம் வட்டாட்சியர் வினோத், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.