tamilnadu

img

தில்லி விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்த முதல்வர்

பெ.சண்முகம் வலியுறுத்தல்

மதுரை, டிச.20- தென்மாவட்டங்களில் உள்ள ஒரே கூட்டுறவு சர்க்கரை ஆலையான அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக் கப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தமது தேர்தல் அறிக்கையி லும், மதுரை மாவட்டத்தில் போட்டி யிட்ட வேட்பாளர்களை ஆதரித்து திரு மங்கலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச் சாரக்கூட்டத்திலும் உறுதியளித்தார். அவர் அளித்த வாக்குறுதியை நிறை வேற்ற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை யில் 2021-2022-ஆம் ஆண்டு அரவை யை உடனடியாகத் தொடங்க வேண்டும். மின் உற்பத்தியை தொடங்க வேண்டும். எத்தனால் உற்பத்தியை தொடங்க வேண்டும். உட்கட்டமைப்புக்கு ரூ.10 கோடி ஒதுக்க வேண்டுமென வலியுறு த்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் என். பழனிச்சாமி தலைமையில் சர்க்கரை  ஆலையில் கடந்த ஏழு நாட்களாக காத்தி ருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

போராட்டத்தை ஆதரித்தும் சர்க்கரை ஆலையை திறக்க வலியு றுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை புறநகர் மாவட்டக்குழு  சார்பில் அலங்காநல்லூரில் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசிய மாநிலச் செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் பேசியதாவது:- பாலக் கோடு, திருப்பத்தூரில் உள்ள கூட்டு றவு சர்க்கரை ஆலைகள்  இயங்குவ தற்கு உத்தரவு பிறப்பித்துள்ள தமிழக முதல்வர், தென் மாவட்டங்களில் உள்ள ஒரே கூட்டுறவு சர்க்கரை ஆலையான அலங்காநல்லூர் ஆலையை இயக்கு வோம் என்ற தேர்தல் கால வாக்குறு தியை நிறைவேற்ற வேண்டும். இந்த ஆலையின் நிர்வாகச் சீர்கேட்டிற்குக் காரணம் அதிமுக அரசு தான் என்பதை யும் முதல்வர் அறிவார். அதிமுக செய்த தவறுக்காக தொழிலாளர்களையும், விவசாயிகளையும் வஞ்சிக்கக்கூடாது. ஆலைக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்து அரவையை தொடங்க உத்தரவிட வேண்டும். ஆலையில் போதுமான கட்டமைப்பு வசதியும் உள்ளது.

அலங்காநல்லூர் சர்க்கரை ஆலைக்கு போதுமான கரும்புகள் உள்ளன. பெரியகுளம் ராஜஸ்ரீ ஆலை இயங்கவில்லை. அந்த ஆலைப்பகு திக்கு உட்பட்ட கரும்புகள், பாரி தனியார் ஆலைக்கு உட்பட்ட கரும்புகளையும் ஆலைக்குக் கொண்டு வந்து அரவை யை தொடங்க வேண்டும். ஒரு சிலர், ஆலையை இயக்கினால் நஷ்டம் எனக் கூறுகிறார்கள். மேற் கண்ட வழிமுறையை இந்தாண்டு கடைப் பிடிப்பதன் மூலமும். எதிர்காலத்தில் கரும்பு உற்பத்திப் பரப்பை அதிக ரிப்பதன் மூலமும் ஆலை லாபகர மாக இயங்கும். இது விவசாயிகள் பிரச்சனை மட்டுமல்ல இந்த ஆலையை நம்பியுள்ள தொழிலாளர்கள், சுற்றுப் புற கிராமமக்களின் வாழ்வாதாரப் பிரச்சனையும் ஆகும்.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இரு அமைச்சர்களும் ஆலையை இயக்குவ தற்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்.  பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக ஆலையை திமுக அரசு இயக்கியது. என்ற இனிப்பான செய்தி யை முதல்வர் வழங்கவேண்டும். தில்லி விவசாயிகள் போராட்டத் தை ஆதரித்த தமிழக முதல்வர், கடந்த ஏழு நாட்களாகப் போராடிவரும், அலங்காநல்லூர் கரும்பு விவசாயிக ளின் நியாயமான கோரிக்கையை ஏற்று ஆலையைத் திறக்க வேண்டும்.  விவசாயிகளின் கரும்பு விவசாயத்தை  பாதுகாப்பதற்கும் கூட்டுறவு ஆலை யைப் பாதுகாக்க வேண்டும். ஆலை யை நம்பியுள்ள தொழிலாளர்கள் குடும்பங்களை பாதுகாப்பதற்காகவும் தான் விவசாயிகள் போராடுகிறார்கள்.

அரவையை தொடங்குவதன் மூலம் மின்உற்பத்தி, எத்தனால் உற்பத்தி செய்யலாம். இதன் மூலம் ஆலையை லாபகரமாக இயக்கலாம். இயக்க முடியும் என்று அவர் பேசினார். போராட்டத்தில் கட்சியின் மாநி லக்குழு உறுப்பினர்கள் சி.ராம கிருஷ்ணன், எஸ்.கே.பொன்னுத்தாய், எஸ்.பாலா, தமிழ்நாடு கரும்பு விவசா யிகள் சங்க மாநிலத் தலைவர் என்.பழனிச்சாமி, கட்சியின் மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள் எஸ்.பி.இளங் கோவன், வி.உமாமகேஸ்வரன், தே.செல்லக்கண்ணு, செ.முத்துராணி. வி.பி.முருகன், பா.ரவி, கார்த்திக், பி.ஜீவானந்தம். அலங்காநல்லூர் ஒன்றி யச் செயலாளர் ஆண்டிச்சாமி, மற்றும் இடைக்கமிட்டிச் செயலாளர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

;