சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெருமழை வெள்ளத்தில் பொது மக்கள் சிக்கி தவித்த போது வெள்ளத்தில் நடந்து சென்று பல இடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அப்போது, தண்ணீர் தேங்கி நின்ற பகுதிகளில் மக்களின் சிரமங்களை கேட்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளையும் வழங்கினார். போரூர், மாங்காடு, அய்யப்பன்தாங்கல் பகுதிகளில் மீண்டும் ஆய்வு செய்த முதலமைச்சர் ஏரியின் தற்போதைய நிலை குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.