tamilnadu

img

பெரும் பாதிப்பு தடுப்பு: விரைவில் நிவாரணம்

தமிழக அரசு எடுத்த முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையால் பெரும் பாதிப்  புகள் தடுக்கப்பட்டுள்ளது என்று முதல் வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் தமிழக கடலோர பகுதியில் பாதிப்பை  ஏற்படுத்தக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்  கப்பட்டதால் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் அரசின் சார்பில் எடுக்  கப்பட்டன. முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் சென்னை எழிலகத்திலுள்ள பேரி டர் மேலாண்மை துறையின் கட்டுப் பாட்டு மையத்தை அடிக்கடி பார்வை யிட்டார். பின்னர் காணொலி மூலம் செங்  கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சி யர்களிடம் நிலைமையை கேட்டறிந்தார்.  இந்த நிலையில், புயல் கரையை கடந்ததையடுத்து பாதிக்கப்பட்ட பகுதி களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமையன்று (டிச.10) ஆய்வு செய்தார். கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலுள்ள கொட்டிவாக்கம், ஈஞ்சம்  பாக்கம் உள்ளிட்ட பல இடங்களுக்கு நேரில் சென்றார். பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு நிவாரண உதவிகளை வழங்கி னார். பெருங்குடி மண்டலம், வார்டு- 181க்கு உட்பட்ட குப்பம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொட்டலங்களையும் வழங்கினார்.  இதையடுத்து காசிமேடு மீன்பிடி பகுதிக்கு முதலமைச்சர் சென்றார். அங்கு சேதமடைந்த படகுகளை ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மீன வர்களிடம் சேத விவரங்களை கேட்ட றிந்தார். 

தப்பியது சென்னை!

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-  மிகப்பெரிய மாண்டஸ் புயல் தாக்கு தலில் இருந்து தமிழகம் அதிலும் குறிப்  பாக சென்னை முழுமையாக மீண்டி ருக்கிறது. தமிழக அரசு எடுத்த முன் எச்ச ரிக்கை நடவடிக்கைகள் காரணமா கத்தான் பாதிப்பு தடுக்கப்பட்டுள்ளது. பெரிய அளவில் மழைப் பொழிவு இருந்  தும், பெரிய சேதம் ஏற்படாமல் அரசு  தடுத்துள்ளது. இதுவரை 4 பேர் மரம ணடைந்துள்ளனர். 98 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 198 வீடுகள் சேதம டைந்துள்ளன. மற்ற சேதங்களை கணக்  கெடுக்கும் பணி நடைபெற்று வரு கிறது. 

பாராட்டு!

அரசு ஊழியர்களின் அர்ப்பணிப்பு, செயல்பாடுகளின் காரணமாக மக்கள்  முழுமையாக பாதுகாக்கப் பட்டிருக்கி றார்கள். சென்னையில் 25 ஆயிரம் ஊழி யர்கள் களத்தில் இருந்தனர். 900 மோட்  டார்களில் 300 மோட்டார்கள் மட்டுமே இயங்கி கொண்டுள்ளது. எந்த சுரங்கப்  பாதையிலும் தண்ணீர் தேங்கவில்லை. 600 இடங்களில் மின் இணைப்பு நிறுத் தப்பட்டது. இதில் 300 இடங்களில் சீர்  செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ள இடங்  களில் மாலைக்குள் சீர் செய்யப்படும். இரவென்றும் பாராமல் பகலென் றும் பாராமல் கே.என்.நேரு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அமைச் சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மேயர்கள்,  துணை மேயர்கள், கவுன்சிலர்கள், மாந கராட்சி அதிகாரிகள், மாநகராட்சி,  மின்சாரம், காவல், தீயணைப்புதுறை யினர், தூய்மைப் பணியாளர்கள் முழு மையாக தங்களை இதில் ஈடுபடுத்திக் கொண்டு நிவாரணப் பணிகளில் ஈடு பட்டது பாராட்டுக்குரியது. புயல் சேத விவரங்களை அதிகாரி கள் திரட்டி வருகின்றனர். விரைவில் நிவாரணம் வழங்கப்படும். காசிமேடு துறைமுகத்தில் படகுகள் சேதம் ஆய்வு செய்யப்பட்டு உரிய நிவாரணம் வழங்  கப்படும். தேவைப்பட்டால் ஒன்றிய அர சின் உதவி கோரப்படும். மற்ற மாவட்  டங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்யப்படும்.  இவ்வாறு முதல்வர் கூறினார்.