tamilnadu

img

சென்னை புத்தக கண்காட்சி ஜன.8 இல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்

சென்னை, டிச. 13 - ஜனவரி மாதம் 6 ஆம் தேதி தொடங்கி 18 நாட்கள் நடை பெறவிருக்கும் சென்னை புத்தகக் காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இது தொடர்பாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி)  தலைவர் எஸ்.வயிரவன், செயலாளர் எஸ்.கே.முருகன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 45ஆவது சென்னை புத்தகக்காட்சி ஜன.6 அன்று தொடங்கி 23ந் தேதி வரை நந்தனம் ஒய்எம்சிஏமைதானத்தில் நடைபெறுகிறது. வேலைநாட்களில் மதியம் 3 மணிக்கு தொடங்கி இரவு 3.30 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 11 மணிக்கு தொடங்கி இரவு 8.30 மணி வரையிலும் நடைபெறும். புத்தகக் காட்சியை ஜன.6 அன்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து முத்தமிழ்றிஞர் கலைஞர் பொற்கிழி விருதுகளை முதலமைச்சர் வழங்குகிறார். 

பதிப்புத்துறையில் சிறப்பாகசெயல்படுகிறவர்களையும் பாராட்டி சிறப்பு செய்ய உள்ளார். இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி உள்ளிட்டோர் கலந்து கொள்கி ன்றனர். 800 அரங்குகளுடன் பிரம்மாண்ட மாக நடைபெற உள்ள இந்த புத்தகக்கண்காட்சிக்கு நுழைவு கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்படும். மாணவர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படும். கொரோனா தொற்று பரவல் காரணமாக பதிப்புத்துறை நொடிந்துள்ளது. எனவே, கடந்தாண்டு அரங்க கட்டணத்தில் 25 விழுக்காடு பதிப்பாளர்களுகு சலுகை அளித்தோம்.

அதேபோன்று இந்தாண்டும் அரங்க வாடகையை குறைத்து வழங்க உள்ளோம். புத்தகக்காட்சியில் அமைக்கப்படும் உணவகங்களை எளிய மக்களும் பயன்படுத்தும் வகையில் விலை நிர்ணயிக்கப்படும்சுய உதவிக்கு ழுக்கள், மலிவு விலையில் உணவு வழங்க தயாராக உள்ளவர்களும் பபாசியை தொடர்பு கொள்ளலாம்.புத்தகங்களை கொண்டு செல்ல மலிவு விலையில் துணி பைகள் விற்கப்படும். கண்காட்சிக்கு வரும் வாசகர்களுக்கு முகக்கவசத்தை இலவசமாக வழங்குவதோடு, தினசரி கொரோனா தடுப்பூசி முகாமும் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

;