மதுரையில் குடியுரிமைதிருத்த சட்டத்திற்கு எதிரான சு.வெங்கடேசன் உள்ளிட்ட 300 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் ஓபுளாபடித்துகை பகுதியில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஐக்கிய ஜமாத் சார்பில் செவ்வாயன்று போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், திருமுருகன் காந்தி, நவாஸ்கனி உள்ளிட்ட 300 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், பொதுசொத்துக்களை சேதப்படுத்தியது உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.