மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட மூத்த தோழர் சி.என்.கிருஷ்ணசாமி(வயது93) மாநிலக்குழு கட்டிட நிதியாக ரூ. 1 லட்சத்தை கட்சியின் மாநிலக்குழு செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் வழங்கினார். இந்நிகழ்வின்போது கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் யு.கே.சிவஞானம், ஆறுச்சாமி மற்றும் சிபிஎம் கிழக்கு பகுதி செயலாளர் என்.செல்வராஜ், தொண்டாமுத்தூர் ஒன்றிய செயலாளர் மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.