tamilnadu

வாரிய தலைவர் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

சென்னை, டிச. 10 - தமிழ்நாடு முன்னாள் மாசுக் கட்டுப் ்பாட்டு வாரியத் தலைவர் வெங்கடாச் ்சலத்தின் தற்கொலை வழக்கை சிபிசி ஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். சென்னை வேளச்சேரி புதிய தலைமை செயலக காலனியை சேர்ந்த வர் வெங்கடாச்சலம். இவர் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக பதவி வகித்தார். செப்டம்பர் மாதம் வெங்க டாச்சலம் ஓய்வுபெற இருந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் வெங்கடாச்சலத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையில் கணக்கில் வராத  13.5 லட்சம் ரூபாய் பணம், 11 கிலோ தங்கம், 6 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் 15.25 கிலோ சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெங்கடாச்சலம் மீது லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் டிசம்பர் 2ஆம் தேதி வெங்கடாச்சலம் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை குறித்து வேளச்சேரி காவல்  துறையினர் வழக்குபதிவு செய்து  வெங்கடாச்சலத்தின் 2 செல்போன்களை யும் பறிமுதல் செய்து சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். வெங்கடாச்சலத்தின் தற்கொலை பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலை யில் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி  தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

;