tamilnadu

img

கல்வித்துறை பட்ஜெட்டில் மோசமான வெட்டு

ஒன்றிய பட்ஜெட் 2025-26இல் கல்வித்துறைக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 0.5% மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது மிக வும் வருத்தமளிக்கிறது” என இந்திய மாணவர் சங்க தலைவர் வி.பி.சானு  மற்றும் பொதுச்செயலாளர் மயூக் பிஸ்வாஸ் ஆகியோர் கூட்டாக அறிக்கை  வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் மேலும் கூறப்  பட்டுள்ளதாவது:  “இந்திய அறிவு முறைகள் திட்டத்திற் கான நிதி ரூ.10 கோடியிலிருந்து ரூ.50 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் உலகத்தரம் வாய்ந்த கல்வி  நிறுவனங்கள் திட்டத்திற்கான நிதி ரூ. 1,800 கோடியிலிருந்து வெறும் ரூ. 475.12 கோடியாக 73% அளவில் குறைக் கப்பட்டுள்ளது கவலையளிக்கிறது. ஐஐடி நிறுவனங்களுக்கான மூலதன  செலவினம் ரூ.11.06 கோடியிலிருந்து ரூ.10.27 கோடியாக 7% குறைக்கப் பட்டுள்ளது. மதிய உணவுத் திட்டத்திற் கான பிரதான மந்திரி போஷன் திட்டத் தில் வெறும் 0.2% அளவில் மட்டுமே உயர்வு (ரூ.12,467.39 கோடியிலிருந்து ரூ.12,500 கோடி) செய்யப்பட்டுள்ளது. இது ஒரு குழந்தைக்கு 5 பைசா உயர்வு மட்டுமே என்பது கவலையளிக்கிறது.  போஷன் டிராக்கர் தரவுகளின்படி, இந்தியாவில் 17% அல்லது 2.7 கோடி குழந்தைகள் குறை எடையுடனும், 36%  குழந்தைகள் வளர்ச்சி குன்றியும் உள்ள  நிலையில் இந்த அற்ப உயர்வு ஏற்றுக் கொள்ள முடியாதது” என அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.