ஆப்பிரிக்க நாடான பர்கினோ பாசோவில் ராணு வம் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டுள்ளது. இது குறித்து ராணுவத்தரப்பில் வெளியாகியுள்ள செய்தியில், ஜனாதிபதி ரோச் மார்க் கிறிஸ்டியன் கபோர் அவரது பதவியிலிருந்து அகற்றப்பட்டதாகக் கூறியிருக்கி றார்கள். அதோடு, அவரது தலைமையிலான அரசாங்கம், நாடாளுமன்றம் ஆகியவையும் கலைக்கப்பட்டன. நாட்டின் எல்லைகள் அனைத்துத் தரப்பிலும் இழுத்து மூடப்பட்டி ருக்கிறது. கொலை முயற்சியிலிருந்து ஜனாதிபதி தப்பித்துள்ளதாக ஆளுங்கட்சி அறிவித்துள்ளது.
சவூதி அரேபியாவுக்கு ஆயுதங்களை அனுப்புவது நிறுத்தப்பட வேண்டும் என்று பிரிட்டன் தொழி லாளர் கட்சியின் முன்னாள் தலைவர் ஜெர்மி கோர்பின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித் துள்ள அவர், “ஏமனில் நடந்துள்ள வான்வழித்தாக்கு தல்களில் 60க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல் லப்பட்டுள்ளனர். அந்நாடு முழுவதும் இணையதளங் கள் முடங்கியுள்ளன. வெளியுலகத் தொடர்பிலிருந்து ஏமன் துண்டிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
பெரு நாடாளுமன்றத்தில் வலதுசாரிகள் பெரும் பான்மையாக இருப்பதால், புதிய அரசியல் சட்டம் எழுதுவதில் முட்டுக்கட்டை போடத் துவங்கி யுள்ளனர். அரசியல் நிர்ணய சபையில் இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக சக்திகள் பெரும்பான்மை பெற்றுள் ளனர். ஜனாதிபதியாக இடதுசாரித் தலைவர் பெட்ரோ காஸ்டில்லோ தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால், நாடாளுமன்றத்தில் வலதுசாரிகளுக்கு பெரும்பான்மை இருப்பதால், புதிய அரசியல் சட்ட வரைவை பொது வாக்கெடுப்புக்கு விடுவதைக் கட்டுப்படுத்த முயல்கிறார்கள்.