தமிழக அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் பணிபுரிந்து பணிக்காலத்திலேயே இயற்கை எய்திய 4 அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். சென்னை, தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை (11 ந் தேதி) நடைபெற்றது நிகழ்வில், தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், எழுதுபொருள் மற்றும்
அச்சுத்துறை ஆணையர் ஆ.சுகந்தி மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.