பாஜகவின் வகுப்புவாத அரசி யலால் வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் கடந்த 3 மாத காலமாக பற்றி எரிந்து வருகிறது. இந்த வன்முறையில் 150-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், மேலும் ஒரு பெண் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள் ளார். கடந்த மே 3 அன்று கலவரத்தின் போது கும்பல் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாக சுராசந்த்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 37 வயதான திரு மணமான பெண் ஒருவர் புதனன்று பிஷ்ணு பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத் தார். புதனன்று மாலை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
6 பேர் கொண்ட கும்பல் “வன்முறையின் பொழுது உயிர் பிழைக்க வேகமாக ஓடும்போது திடீரென கால் இடரி கீழே விழுந்துவிட்டேன். உடனே வந்த என் மைத்துனியிடம் குழந்தைகளை ஒப்படைத்து ஓடும்படி அறி வுறுத்தினேன். அவரும் ஓடிவிட்டார். நான் எழுந்தபோது என்னை 6 பேர் சுற்றி தரக் குறைவாக பேசி, கும்பலாக பாலியல் வன்கொடுமை செய்தனர். நான் எனது குடும்பத்தின் நலன் கருதி இதனை வெளி யில் சொல்லாமல் இருந்தேன். ஆனால் இப்போது பாதிக்கப்பட்ட பெண்கள் தங்க ளுக்கு நீதி வேண்டி குரல் கொடுத்து வரும் சூழலில் நான் துணிந்து புகார் கொடுத்துள்ளேன்” என்று அப்பென் குறிப்பிட்டுள்ளார்.