இன்று, தேசத்தந்தை அண்ணல் காந்தி யின் பிறந்த நாள். இந்த நாளை நாடே கொண்டாடுகிறது. அரசு விடுமுறை நாள். இந்த நாளை தேர்வு செய்து, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில் தமிழ் நாடு முழு வதும் 50 இடங்களில் பேரணிக்கு அனுமதி பெற்று நடத்த முயன்றார்கள். தமிழக அரசு அந்த நாளில் பேரணி நடத்த அனுமதி மறுத்த தையடுத்து உயர்நீதிமன்றம் நவம்பர் 6 அன்று நடத்த அனுமதி வழங்கியுள்ளது. அக்.2-ஐ தேர்ந்தெடுக்க, காந்தியின் பிறந்த நாள் என்ப தும் ஒரு காரணம் என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது கவனிக் கத்தக்கது. மத நல்லிணக்கத்திற்காகவும், மக்கள் ஒற்றுமைக்காகவும் தனது உயிரையே பணயம் வைத்தவர் அண்ணல் காந்திஜி. அவரின் பாரம்பரியத்தை அழிப்பதுதான் ஆர்.எஸ்.எஸ் முன்னெடுக்கும் அரசியலின் இலக்கு. அவரை சுட்டுக் கொலை செய்த கோட்சேவை ‘தேச பக்தராக’ முன்வைத்துக் கொண்டே, அவரின் சிந்தனைகளை அரவணைத்து அழிக்க வேண்டும் என்று முயற்சி நடக்கிறது. மறு பக்கத்தில், பண்டித நேருவின் பங்களிப்பை எதிர்த்து அழிப்பதற்கான தாக்குதலையும் முன்னெடுக்கிறது.
1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் தேதி நடந்த ஒரு நிகழ்வை, காந்தியின் சரிதை யில் இருந்து இங்கே குறிப்பிடுகிறேன். பிரார்த் தனைக்காக சென்ற அவரை நோக்கி ஒரு நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. அந்த சத்தம் கேட்டு சுற்றியிருந்தவர்கள் அதிர்ச்சி யுற்றார்கள். ஆனால் காந்தி அதுபற்றி கவலைப் படவில்லை, தனது பேச்சைக் கேட்கும்படி சுற்றியிருந்தவர்களை அறிவுறுத்தினார். அடுத்த நாள் அவர் பிரார்த்தனைக்காக வந்த போது, ‘குண்டு வீசியவனை பிடித்துவிட் டோம். அவன் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்று சிலர் கூற காந்தி அவர்க ளை நோக்கி ‘அவரை விட்டுவிடுங்கள். தண் டிக்காதீர்கள்; ஒருவேளை நான் இந்து மதத்திற்கு விரோதி என்று கருதியிருக்கலாம்’ என்றார். அத்துடன் ‘இந்து மதத்தை இந்த வழியில் பாது காக்க முடியாது.’என்று காந்திஜி மக்களுக்கு எடுத்துச் சொன்னார். அவர் எந்த மதத்தின் மீதும் வெறுப்புக் கொள்ளவில்லை. அனைத்து மதங்களையும், மதங்களை பின்பற்றும் மக்களையும் சமமாக பாவிக்க வேண்டும் என்றதுடன் மத நல்லி ணக்கம், மக்கள் ஒற்றுமைக்காக தொடர்ந்து போ ராடினார். இதற்காகவே அவர் படுகொலை செய்யப்பட்டார். காந்திஜியின் கொலை வழக்கில் நாதுராம் கோட்சே, மதன்லால் (24.01.1948 அன்று வெடிகுண்டு எறிந்தவர்) உள்ளிட்டு 9 பேர் மீது வழக்கு தொடரப் பட்டது. சாவர்க்கர் உள்ளிட்டு குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டார்கள். சதித் திட்டம் நடந்தது உண்மை. ஆனால் அதற்கும் நடந்த கொலைச் சம்பவத்திற்கும் உள்ள தொடர்பை காவல்துறையினர் நிரூபிக்கவில்லை என்பதா லேயே சாவர்க்கர் விடுதலையானார். அந்த சாவர்க்கரைத்தான் தற்போது தேசப்பிதா என்று ‘காந்திஜியோடு’ ஒப்பிட்டு ஆர்எஸ்எஸ்-பாஜக தலைவர்கள் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள்.
தில்லியில் காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்ட அப்பகுதி காந்தியின் அருங்காட்சியகமாக ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த அறக்கட்டளைக்கு பிரதமர் தான் தலை வர். அந்த அறக்கட்டளையின் சார்பாக காந்தி யின் நினைவிடம் என்ற பெயரில் ஒரு மாத இதழ் வெளியிடப்படுகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்னதாக அந்த இதழின் சார்பாக வெளி யிடப்பட்ட சிறப்பிதழில் காந்திஜி, சாவர்க்கர் இருவருமே தேசப்பிதாக்கள் என குறிப்பிட்டு கட்டுரைகள் வெளியாகியுள்ளன. முந்தைய ஆட்சியில் நாடாளுமன்ற வளாகத்தில் சாவர்க் கரின் படத்தை வைத்த மோடி அரசாங்கம், தற்போது காந்திஜி, சாவர்க்கர் இருவருமே தேசப்பிதாக்கள் என்று நிறுவ முயல்கிறது. அண்ணல் காந்தியின் பாரம்பரி யத்தையும், பங்களிப்பையும் எதிர்கால தலை முறைகளுக்கு எடுத்துக் காட்டுவதற்காக காந்தி நினைவாலயங்களும், அருங்காட்சியகமும் உருவாக்க நிதி திரட்டப்பட்டது. இதற்காக குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத், பிரதமர் ஜவஹர்லால் நேரு, உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் உள்ள டங்கிய ஒரு குழு அமைக்கப்பட்டது. இதில் வசூ லான தொகை ரூ. 11 கோடியில், 23 லட்ச ரூபாயை பயன்படுத்தி அகமதாபாத் நகரத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் சபர்மதி ஆசிரமம் விரி வாக்கப்பட்டது.
தில்லியில் நான்கு ஏக்கர் பரப்பளவில் தேசிய காந்தி அருங்காட்சியகம் (1961 ஆம் ஆண்டு) உருவாக்கப்பட்டது. அந்த அருங் காட்சியகத்திற்கு நான் 16.09.2022 அன்று சென்றிருந்தேன். இந்த அருங்காட்சியகத்தின் இயக்குநராக தற்போது தமிழகத்தை சார்ந்த காந்தியவாதி டாக்டர் அண்ணாமலை பணி யாற்றி வருகிறார். அங்குள்ள நூலகத்தில் மொத்தம் 45,000 நூல்கள் உள்ளன. அவை களில் 25,000 நூல்கள் காந்தியை பற்றியவை. தோழர் இ.எம்.எஸ் அவர்கள் காந்தியை பற்றி எழுதிய ‘மகாத்மாவும் அவரது இசமும்’ என்ற நூல் உட்பட அதில் இடம்பெற்றுள்ளன. அகமதாபாத் நகரில் 5 ஏக்கரில் காந்தி அருங்காட்சியகம் இயங்கி வருகிறது. 95 ஏக்க ரில் பல பணிகளை மேற்கொள்ளும் 5 அறக் கட்டளைகள் இயங்கி வந்தன. சமீபத்தில் குஜ ராத் மாநில அரசு மேற்கண்ட 5 அறக்கட்ட ளைகளுடைய நிர்வாக அறங்காவலர்களை யும் உள்ளடக்கி மாநில அரசினுடைய 9 உறுப்பி னர்களையும் மொத்தமாக உள்ளடக்கி ஒரு அறக்கட்டளையாக உருவாக்கியது. ஒட்டு மொத்த 100 ஏக்கர் உள்ளடக்கிய ஆசிரமத்தை யும், அறக்கட்டளைகளையும் மாநில அரசி னுடைய அறக்கட்டளைக்கு மாற்றி பத்திரம் பதிவு செய்துள்ளார்கள். இதற்கு எதிராக காந்தி ஜியின் கொள்ளுப்பேரன் துசார் காந்தி, குஜ ராத் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. தற்போது, அந்த 100 ஏக்கரில் சில வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்த போவதாக குஜராத் மாநில அரசு அறி வித்துள்ளது. காந்திஜியின் பெயரால் இயங்கி வந்த அறக் கட்டளைகளை ஏன் மாநில அரசு தன்னுடைய பெயரில் கொண்டு வர வேண்டும்?. இதில் குஜராத் அரசு என்ன செய்யப் போகிறது? இவைகளெல்லாம் பெரிய கேள்விகளாக எழுந்துள்ளன. இதுபோன்ற நடவடிக்கைகள் மூலமாக காந்திஜியினுடைய பங்களிப்பை யும், பாரம்பரியத்தையும் அரவணைத்து அணைத்து அழித்திட சங் பரிவார முயற்சிகள் தொடர்கின்றன.
நேரு மறைவிற்கு பிறகு அவர் வாழ்ந்த இடம் நேரு அருங்காட்சியகமாக இயங்கி வந்தது. அவருடைய நூல்கள் மட்டுமல்லா மல், நாட்டு சுதந்திரத்திற்காக, மதச்சார்பின்மைக் காக அவர் ஆற்றிய பங்களிப்பையும் இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்வதாக அருங் காட்சியகம் இயங்கி வந்தது. தற்போது, நேரு அருங்காட்சியகம் என்பதற்கு பதிலாக பிரதமர் அருங்காட்சியகம் என்று பெயர் மாற்றப் பட்டுள்ளது. இதன் பொருள் நேரு மட்டுமல்ல, நேருக்கு பிறகு பொறுப்பிலிருந்து அனைத்து பிரதமர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் பங்களிப்பை பற்றி விளக்கக் கூடிய அருங் காட்சியகமாக இயங்கும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. பொறுப்பிலிருந்த நாட்டு பிரதமர்களு டைய பங்களிப்பை முன்னெடுத்துச் செல் வதை யாரும் ஆட்சேபிக்க முடியாது. ஆனால், நேரு அருங்காட்சியகம் என்ற அந்த பெயரை மாற்றுவதன் மூலம் நேருவின் பாரம்பரி யத்தையும் அழிப்பதுதான் மோடி தலைமை யிலான ஒன்றிய அரசின் நோக்கம். இவற்றிற்கு காரணம் இல்லாமல் இல்லை. 1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் தேதி (காந்திஜி சுட்டுக் கொல்லப்படுவதற்கு 6 நாட்க ளுக்கு முன்பு) உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழ கத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் நேரு உரையாற்றினார். “எனது நெடுநாள் கன வுகள் பல, சமீபத்திய நிகழ்வுகளால் சுக்கு நூறாகச் சிதறிப்போயிருந்தாலும் கூட, அடிப் படை நோக்கமானது இன்னும் அப்படியே தான் இருக்கிறது. அது மாறுவதற்கும் வாய்ப்பில்லை. உயர்ந்த லட்சியங்களாலும் உன்னத முயற்சியாலும் ஆன சுதந்திரமான இந்தியாவை உருவாக்க முயல்வதுதான் அந்த நோக்கம். அந்த இந்தியாவில் அனைவ ருக்கும் சம வாய்ப்புகள் கிடைக்கும். வெவ் வேறு சிந்தனை போக்குகளும் பண்பாடுக ளும் ஒன்று சேர்ந்து மக்களின் முன்னேற்றத்திற் கும் மேம்பாட்டிற்குமான பெரும் பிரவாகத்தை உருவாக்கும்”.
மதச்சார்பின்மையை பாதுகாப்பதோடு ஆர்எஸ்எஸ்-சின் உண்மை முகத்தை அம்பலப்படுத்துவதில் பண்டித நேரு உறுதி யாக இருந்தார். பாஜகவும் ஆர்எஸ்எஸ்-உம் நேருவை எதிர்ப்பதற்கு இதுதான் அடிப்படை காரணம். இந்தியாவை இந்துராஷ்டிரமாக மாற்றிட துடிக்கும் பாஜக-ஆர்எஸ்எஸ்க்கு மேற்கண்ட நேருவின் உரை தடையாக இருக்கும் என்ப தால்தான் அவர்கள் நேருவையும், பங்க ளிப்பையும் எதிர்க்கிறார்கள். அதன் தொடர் முயற்சியாகவே தமிழ் நாட்டில் ஆர்.எஸ்.எஸ் முன்னெடுக்கவுள்ள பேரணிகளை பார்க்க முடிகிறது. அதனால் தான் சமூக நல்லிணக்க மனித சங்கிலி இயக் கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்து முன்னெடுக்கின்றன. மதச்சார்பின்மைக்காக, மத நல்லிணக் கத்திற்காக, மக்கள் ஒற்றுமைக்காக தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்த காந்திஜியின் பங்களிப்பையும், பாரம்பரியத்தையும் அரவ ணைத்து மெல்ல மெல்ல அழிக்கவே பாஜக ஒன்றிய அரசும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் முயற்சித்து வருகின்றன.