tamilnadu

img

கல்வி நிறுவனங்களில் உள் புகார் குழு

தருமபுரி, டிச.4- பெண் குழந்தைகளை பாது காக்க கல்வி நிறுவனங்களில் உள்  புகார் குழு அமைக்க வேண்டு மென அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலக்குழு கூட்டம் தருமபுரியில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் எஸ்.வாலண் டினா தலைமை வகித்தார். மாநில  பொதுச்செயலாளர் பி.சுகந்தி, மாநில பொருளாளர் ஆர்.மல்லிகா  உள்ளிட்ட மாநிலக் குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.  தமிழகத்தில் உள்ள கல்வி நிலையங்களில் மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல், வன்கொடுமை சம்பவங்கள் அதி கரித்து வருகின்றன. அண்மை யில், கோவை, கரூர், திருச்சி,  திண்டுக்கல், விருதுநகர், சிவ கங்கை ஆகிய மாவட்டங்களில் மாணவிகள் பாதிக்கப்பட்ட சம்பவங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

ஆகவே, இத்தகைய சம்பவங் ்களை தடுக்க பள்ளி, கல்லூரி களில் உள் புகார் குழு அமைக்க வேண்டும். பெண் குழந்தை களை பாதுகாக்கவும், பாலியல் சீண்டலை தடுக்கவும் தமிழக அரசு கடுமையான சட்டம் இயற்ற  வேண்டும். தமிழ்நாட்டில் சமீபத்தில் பெய்த மழையால் பல மாவட்டங் களில் ஏரி, குளம், ஆறுகள் நிரம்பி வெள்ளநீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து, பொது மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளா கியுள்ளனர். ஆகவே, குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளநீர் வராமல் தடுக்க மழைநீர் கால்வாய்களை தூர்வார வேண்டும். வெள்ளம் பாதித்த மாவட்டங்களிலுள்ள மக்களுக்கு உரிய நிவாரணம், நிதி  வழங்க வேண்டும்.  

தருமபுரி மாவட்டம், சித்தேரி மலைப்பகுதி கிராமங்களில் இருந்து ஆந்திரா மாநிலத்திற்கு கூலி வேலைக்கு சென்ற பழங்குடியினர் இருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும். உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும்.மேலும், ஆந்திரா மாநிலத்தில் கூலி வேலைக்கு சென்ற தமிழக தொழிலாளர்கள் பலர் சிறையில் உள்ளனர். இவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது.