tamilnadu

img

மதுரையில் அதிமுக மாநாடு

மதுரை வலையங்குளத்தில் ‘அதிமுக பொன்விழா எழுச்சி  மாநாடு’ ஞாயிறன்று கொடி யேற்றத்துடன் தொடங்கியது. அதி முக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மாநாடு அரங்க வளா கத்தில் நிறுவப் பட்டிருந்த 51 அடி உயரத்திலான கொடிக் கம்பத்தில் கொடி ஏற்றி வைத்து  மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.  மாநாட்டையொட்டி தொடர் ஓட்  டமாக கொண்டு வரப்பட்ட மாநாட்டு  ஜோதி பழனிசாமியிடம் ஒப்படைக்கப் பட்டது. அதிமுக பேரவை சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதய குமார் தலைமையில் சுமார் 3 ஆயிரம்  பேர் அணிவகுத்து நின்று எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளித்தனர். கொடியை ஏற்றும் போது 10 நிமி டங்கள் ஹெலிகாப்டரில் இருந்து 600 கிலோ மலர்கள் தூவப்பட்டன. 

32 தீர்மானங்கள்

மாநாட்டில், சட்டம் - ஒழுங்கு,  அனைத்து குடும்பத் தலைவிகளுக் கும் ரூ.1000 வழங்காததற்கு கண்ட னம் உள்ளிட்ட திமுக அரசுக்கு எதி ராக 32 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதில், 16 தீர்மானங்கள் முத லில் நிறைவேற்றப்பட்டன. இதனை அதிமுக நிர்வாகி வைகைச் செல்வன்  மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் வாசித்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

அதிமுக மாநாட்டில் பங்கேற்க வந்த அதிமுகவினர் தங்களது வாக னங்களை மாநாடு நடக்கும் பகுதியில்  சாலையோரங்களில் நிறுத்திவிட்டு சென்றனர். இதனால், வேலம்மாள் மருத்துவமனையில் இருந்தும், இராஜ பாளையம், தூத்துக்குடி சாலையில் சுமார் 2 கி.மீ., தூரத்திற்கு வாகனங்கள்  அணிவகுத்து நின்றன. மாநாட்டுக்கு வந்த வாகனங்களும், வழக்கமான வாகனங்களும் நீண்ட வரிசையில் சாலையில் காத்து நின்றன.

ஈபிஎஸ் போஸ்டர்கள் கிழிப்பு

அதிமுக மாநாடு நடைபெறும் மண்டேலா நகர் சுற்றுவட்டாரப் பகு திகளில், ஒட்டப்பட்டிருந்த எடப்பாடி பழனிசாமியின் படங்கள் நிறைந்த போஸ்டர்கள் கிழிக்கப்பட்டிருந்தன.

தேனியில் போராட்டம்

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள கன்னியம்பட்டியில் மது ரையில் நடைபெற்ற மாநாட்டிற்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு  தெரிவித்து அதிமுக கொடியை அரைக்  கம்பத்தில் பறக்க விட்டு சீர்மரபினர் போராட்டம் நடத்தினர். இதில் பெண்  கள், ஆண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘இந்த போராட்டம் துவக்கம்தான். இனி தமிழகம் முழுவ தும் அதிமுக கொடிகள் இறக்கப் படும்.