tamilnadu

img

மோடி அரசின் கருப்புச்சட்டத்திற்கு எதிராக மேலூரில் முஸ்லிம்கள் பேரணி-ஆர்ப்பாட்டம்...

மதுரை:
விவசாயிகளுக்கு விரோதமாக கொண்டுவரப்பட்டுள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் மேலூரில் முஸ்லிம்கள் மாபெரும் பேரணி- ஆர்ப்பாட்டத்தை மதுரைமாவட்டம் மேலூரில் வெள்ளிக்கிழமை நடத்தினர். ஹாஜியார் சேக்தாவுத் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  மதுரைமக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன்,   ஜமாத் தலைவர்கள், நிர்வாகிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.பி.இளங்கோவன், மேலூர் தாலுகா செயலாளர் எம்.கண்ணன், மாவட்டக்குழு உறுப்பினர் வி.அடக்கிவீரணன், எஸ்.பி.மணவாளன், எஸ்.ஜெயராமன் உட்பட ஏராளமான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய சு.வெங்கடேசன், “ இந்திய அரசியல்வரலாற்றில் ஒரு சட்டத் திருத்தத்திற்கு எதிராக அந்தத் துறையை சேர்ந்த அமைச்சர் ராஜினாமா செய்வது தற்போது தான் நடந்துள்ளது. அவர் சும்மா ஒன்றும் ராஜினாமா செய்யவில்லை “நள்ளிரவில் விவசாயிகளுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட கருப்புச் சட்டம் என்று மோடி அரசை கடுமையாக விமர்சித்து உள்ளார்” இந்தியாவில் 60 கோடி மக்கள் விவசாயத்தை சார்ந்தே உள்ளனர். இந்த புதிய வேளாண் சட்டம் மூலமாக வேளாண்மையை அழிக்கும் விதமாக மோடி அரசு செயல்படுகிறது,  இந்திய விவசாயிகளுக்கு துரோகம் விளைவிக்கும் சட்டத்தை எதிர்த்து தொடர்ந்து பேராராடுவோம் என்றார்.

;