tamilnadu

img

நெஞ்சில் நிறைந்த தலைவர்!

பொறியியல் பட்டயம் பெற்று பொதுப் பணித்துறையில் பணியில் சேர்ந்தவர். பொதுவுடமை தத்துவத்தால் ஈர்க்கப்பட்டு கம்யூனிஸ்ட் ஊழியரா னவர் தோழர் கே.வரதராசன். திருச்சி மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை வளர்ப்பதில் முன்னின்றார். பல இளைஞர்களையும் கட்சிக்கு கொண்டு வந்தார்; ஊழியராக்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாவட்டச் செயலாளரானார். மாநிலக்குழு, மாநில செயற்குழு, மத்தியக்குழு, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் என மக்கள் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பொறுப்பில் சிறப்பாகச் செயல்பட்டார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம், தீக்கதிர் நாளிதழ் ஆகியவற்றின் வளர்ச்சியில் கவனம் செலுத்தினார். கட்சியின் சார்பில் வெளியிடப்பட்ட செங்கீதங்கள் எனும் பிரச்சாரப் பாடல் தொகுப்புக்கு பொறுப்பாய் இருந்து  செயல்பட்டார். அவரும் சில பாடல் களை எழுதினார். விவசாயிகள் பிரச்ச னை பற்றியும் போராட்டக் காலங்களி லும் பல்வேறு கட்டுரைகளை எழுதி யுள்ளார். எனினும் சாதி, மதம், வர்க்கம் எனும் நூலும் இந்திய தத்துவ தரி சனம் எனும் நூலும் அவரது ஆய்வு மனப் பான்மையையும் ஆழ்ந்த ஞானத்தையும் வெளிப்படுத்துபவையாகும். கட்சியின் சார்பாக சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார். தனது அனு பவங்களை தீக்கதிரில் கட்டுரைகளாக எழுதினார். ராஜஸ்தான் மாநில விவசாயிகள் போராட்டம் போன்ற வற்றில் பங்கேற்று வழிகாட்டி அதன் வெற்றிக்கு துணை புரிந்தார். சாதாரண கட்சி தோழர்களுடனும் நெருங்கிப் பழகிடும் இயல்பு கொண்டவர். காட்சிக்கு எளியர்; பேச்சுக்கு இனியர். தோழர் களை அரவணைத்துச் செல்லும் தலை வர். அவரது இறுதிக்காலம் வரை - கொரோனா உயிரைப் பறித்துச் செல்லும் வரை - தான் கொண்ட கொள்கைக்காக வாழ்ந்த தோழர் கே.வரதராசன் என்றென்றும் தோழர்கள் நெஞ்சங்களில் நிறைந் திருப்பார்.