tamilnadu

img

ஏழைகள் நலனுக்காக வாதாட வேண்டும்

             சென்னை, செப்.20- ஏழைகளின் நலனுக்காகவே வழக்கறிஞர்கள் வாதாடவேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். சென்னை பெருங்குடியில் செவ்வா யன்று (செப்.20) தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வெள்ளி விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:- 1989 இல் நூற்றாண்டு கண்ட சென்னை சட்டக்கல்லூரிக்கு, ‘டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி’ என்று பெயர் சூட்டியவர் கலைஞர். 1997 ஆம் ஆண்டு சென்னையில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் உருவாக்கியவரும் கலைஞர்தான். 40 மாணவர்களைக் கொண்டு ஆரம் பிக்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம், தற்போது 4500 மாணவர்களைக் கொண்டிருக்கிறது. 11 முதுநிலைப் பிரி வுகளும் 5 இளங்கலைப் பிரிவுகளும் இருக்கின்றன. 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சட்டம் மற்றும் ஆராய்ச் சிப் படிப்பை படித்து வருகிறார்கள். உங்களது சட்ட அறிவை, வாதத் திறனை, ஏழை எளிய-ஒடுக்கப்பட்ட மக்களின் நீதிக்காக பயன்படுத்த வேண்டும். நமது அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கிக் கொடுத்துள்ள அடி ப்படை உரிமைகளைக்காக்க உங்க ளது கல்வியை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.

சட்டநீதியை மட்டுமல்ல - சமூகநீதி யையும் நிலை நாட்டக்கூடியவர்களாக வழக்கறிஞர்கள் விளங்க வேண்டும். மக்களுக்கு இன்றைய தேவை என்பது நீதி மட்டும்தான். அத்தகைய நீதியின் தூதுவர்களாக சட்டம் படிக் கும் நீங்கள் எதிர்காலத்தில் திகழ வேண்டும். உங்களது கட்சிக்காரர் களுக்கு வெற்றி தேடித்தரும் வழக்கறி ஞர்களாக மட்டுமில்லாமல் - நீதிக்கு வெற்றி தேடித்தரும் வழக்கறி ஞர்களாக நீங்கள் விளங்க வேண்டும். இந்த விழாவில் அமைச்சர்கள் ரகுபதி, மா.சுப்பிரமணியன், செஞ்சி  மஸ்தான் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

;