tamilnadu

img

இந்த அடி போதுமா! - கணேஷ்

நவம்பர் 16, 2021. டெஹ்ரானின் ராணுவ தலைமையகத்தில் பரபரப்பு தொற்றியிருந்தது. “நமது எண்ணெய்க் கப்பலைக் கொள்ளை யடித்து விட்டார்கள்.” அனைத்து அதிகாரிகளின் முகங்களிலும் அதிர்ச்சி ரேகைகள்.

“யார்..?”
பலரும் உதட்டைப் பிதுக்கினார்கள். 
“எங்கு நடந்தது..?”
“ஓமன் கடலில்..”
 

முழுத் தகவல்களையும் சேகரித்திருந்த ஒரு அதிகாரி எழுந்து விளக்கத் துவங்கினார். “நமது கப்பல், எண்ணெய் சுமந்து சென்று கொண்டிருந்தது. அப்போது நமது கப்பலை திடீரென்று சுற்றி வளைத்துக் கொண்டனர். என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்குள் ஆயுதந்தாங்கிய ராணுவத்தினர் உதவியோடு, நமது எண்ணெய்யை வேறொரு கப்பலுக்கு மாற்றினார்கள். அதை எடுத்துச் செல்கிறார்கள். எங்கு போகிறார்கள் என்று தெரியவில்லை.”

“யார் எடுத்துச் செல்வது..?”
“வேறு யார்... அமெரிக்கர்கள்தான்.”
பலரின் முகங்களில் அவநம்பிக்கை தெரிந்தது. “இனி என்ன செய்ய முடியும்.. அவர்கள் வைத்தது தானே சட்டம். எண்ணெய் அவ்வளவுதான்” என்றெல் லாம் எண்ணங்கள் ஓடின. சிலர் அதை வெளிப்படையாகவே கூறினர். “இப்படி அமெரிக்கர்களால் கொள்ளைய டிக்கப்பட்டதை எந்த நாடாவது மீட்டிருக்கிறதா” என்று வேறொருவர் கேள்வி எழுப்பினார். யாரும் பதில் சொல்லவில்லை. சிலர் இல்லை என்று தலையை மட்டும் ஆட்டினர். “நம் மீது தடைகள் விதித்திருக்கிறார்களே... அதை வைத்துக் கொள்ளையை நியாயப்படுத்தி விடு வார்களோ” என்றார் ஒருவர். இதற்கு ஒருவர் பாய்ந்து பதில் சொல்கிறார், “அது சட்டவிரோதமான தடை. அதை வைத்தெல்லாம் கொள்ளைகளை நியா யப்படுத்த முடியாது” என்றார். ஆனால், அவர்களிட மிருந்து கொள்ளையடிக்கப்பட்ட எண்ணெய்யை மீட்பது சாத்தியமா என்ற கேள்வியையும் எழுப்பிக் கொண்டார்.

எவ்வளவு நாள்தான் இதைத் தாங்குவது..? ஈரான் கப்பற்படையின் இரண்டு ஹெலிகாப்டர் கள் விருட்டென்று கிளம்பிப் பறந்தன. அதில் ராணுவ வீரர்களும் இருந்தனர். எந்தக் கப்பலுக்கு தங்கள் எண்ணெய் மாற்றப்பட்டதோ அதைக் கண்டுபிடித்து விட்டார்கள். கப்பலைப் பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி. அதில்  வியட்நாம் கொடி பறந்து கொண்டிருந்தது. தயங்கினார்கள். ஆனால், தலைமையகம் அவர்களுக்கு தெளிவு தந்தது. இது அமெரிக்காவின் வாடிக்கையான தகி டுதத்தம்தான். தங்கள் குற்றத்தை அடுத்தவர்கள் மீது  பழி போடுவதற்கான உத்தி இதுவாகும் என்றவு டன், ஈரான் ராணுவம் நடவடிக்கையில் இறங்கியது. அந்தக் கப்பலின் தளத்தில் இரண்டு ஹெலி காப்டர்களும் இறங்கின. ஈரானின் ராணுவ வீரர்கள் கப்பலைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். 

நெருக்கடியே அப்போதுதான் உருவானது. சல்லிவன் மற்றும் மைக்கோல் மர்பி ஆகிய இரண்டு பெரிய போர்க்கப்பல்கள் இந்த எண்ணெய்க் கப்பலை நெருங்கத் துவங்கின. அங்கும் தோன்றிய ஈரானின் கடற்படையினர் விளைவுகளைச் சந்திக்கத் தயாரா என்று கேட்டனர். எப்படி நமக்குத் தெரியாமல் இவர்கள் வந்தனர் என்று அமெரிக்கா யோசிப்ப தற்குள் ஈரானின் கடற்பகுதிக்குள் அந்தக் கப்பலைச் செலுத்தினார்கள். எண்ணெய் மீட்கப்பட்டது. அடுத்த அதிர்வலைகள் அமெரிக்க ராணுவத் தலைமையகத்தில் ஏற்பட்டது. வாங்கிய அடியை வெளியில் சொன்னால் அவமானம். மென்று விழுங்கினர். ஊடகங்களிலும் செய்தி வராமல் பார்த்துக் கொண்டனர். அமெரிக்காவை யாராலும் எதிர்க்க முடியாது என்ற பிம்பம் உடைந்து நொறுங்கியுள்ளது. கட்டுக் கதை அம்பலமாயிருக்கிறது. சமூக வலைத்தளங்க ளில் ஈரானியர்கள், “இந்த அடி போதுமா.. இன்னும் கொஞ்சம் வேணுமா” என்று அமெரிக்காவை வறுத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். 

(பிரஸ் டிவி செய்தியின் தழுவல்) 
- கணேஷ்

 

 

;