நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆஜராகாமல் ஓடி ஒளியும் சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக நடிகை விஜய லட்சுமி கடந்த 2011-ஆம் ஆண்டு சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரை 2012-ஆம் ஆண்டு விஜயலட்சுமி திரும்பப் பெற்றுக் கொண்ட நிலையில் பல்வேறு காரணங் களுக்காக இந்த விசாரணை மீண்டும் நடைபெற்று வருவதாகவும், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கை ரத்து செய்ய முடியாது என்று கூறி விட்டதுடன், இந்த வழக்கில், 12 வாரங்களுக்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். அதன் பேரில் வளசரவாக்கம் போலீசார் இந்த வழக்கில் மீண்டும் விசாரணையை தீவிரப்படுத்தினர். புதன்கிழமை (பிப்.26) அன்று வழக்கு தொடர்பாக, பெங்களூருவில் உள்ள நடிகை விஜயலட்சுமி வீட்டுக்குச் சென்று அவரிடம் போலீசார் விசா ரணை நடத்தினர். சுமார் 7 மணி நேரம் விசாரணை நடந்தது. அப்போது, இந்த வழக்கு தொடர்பான முக்கிய ஆவ ணங்கள், புகைப்படங்கள் ஆதா ரங்களை போலீசாரிடம் நடிகை விஜய லட்சுமி வழங்கியதாக கூறப்படுகிறது. முன்னதாக, வழக்கு தொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் பிப்ரவரி 27 அன்று விசாரணைக்கு ஆஜ ராகுமாறு சீமானுக்கு ஏற்கெனவே போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால், அதன்படி வியாழனன்று சீமான் ஆஜராகவில்லை. அவ ருக்குப் பதிலாக, அவரது வழக்கறிஞர் கள் நேரில் ஆஜராகி, சீமான் ஆஜராவதற்கு 4 வார காலம் அவகாசம் கோரினர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,
சீமான் பிப்ரவரி 27 அன்று வளசர வாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரா காத நிலையில், பாலவாக்கத்தில் உள்ள சீமான் இல்லத்துக்குச் சென்ற போலீ சார், வெள்ளிக்கிழமை (பிப்.28) காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் ஒட்டினர். அப்போது அங்கிருந்த நா.த.க. நிர்வாகி அந்த சம்மனை கிழித் தெறிந்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசா ரிக்கச் சென்றபோது, மேலும், காவல் துறையினரை அங்கிருந்த காவலாளி அமல்ராஜ் தடுத்து நிறுத்தி, துப்பாக்கியை நீட்டியதுடன், காவல் ஆய்வாளரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனை யடுத்து, அந்தக் காவலாளியை போலீ சார் கைது செய்தனர். அதேபோல், போலீ சார் ஒட்டிய சம்மனை கிழித்த சுதாகர் என்பவரையும் போலீசார் கைது செய்த னர். அமல்ராஜ் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆயத தடுப்புச் சட்டப்பிரிவிலும் வழக்கு போடப்பட்டுள்ளது. இதனிடையே, “சீமான் வீட்டின் காவலாளி ராணுவ வீரர் என்பதால், அவர் துப்பாக்கி வைத்திருந்ததாகவும், போலீசார் ஒட்டிய சம்மனைக் கிழிக்கச் சொன்னது நான் தான், அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும், போலீசார் மீண்டும் சம்மனை ஒட்டிக் கொள்ளலாம்” என்றும் சீமான் மனைவி கயல்விழி தெரிவித்துள்ளார்.
ஆஜராகமாட்டேன்: என்ன செய்ய முடியும்?
வழக்கம்போல சீமான் ஜம்பம்
ஓசூரில் சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், “என்னால் காவல்நிலை யத்திற்கு வரமுடியாது. சென்னை வந்தவுடன் வருவதாக கூறியிருந் தேன். நடிகையின் புகார் குறித்த வழக்கை ரத்து செய்யக் கோரி நான் தான் வழக்குத் தொடர்ந்தேன். இரு வரையும் உட்கார வைத்து விசாரணை செய்ய வேண்டும். ஜெயலலிதா, எடப்பாடி முதல்வராக இருந்த, கடந்த 10 ஆண்டுகள் அந்த நடிகை (விஜய லட்சுமி) வரவில்லை. இந்த வழக்கில் உடனடியாக ஆஜராக என்ன அவ சரம் இருக்கிறது? இந்த வழக்கில், போலீ சார் அனுப்பியுள்ள சம்மனுக்கு ஆஜ ராகியே வேண்டும், என்றால் கூட நான் ஆஜராக மாட்டேன். என்ன செய்ய முடி யும்?” என்று அடாவடியாக குறிப்பிட்டார்.