tamilnadu

img

வர்க்கப் போராட்டத்தின் பகுதியாய் தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்கள்

ஆந்திராவின் தெலுங்கானா, கேரளா வின் புன்னப்புரா வயலார், வங்கா ளத்தின் தேபகா, மராட்டியத்தின் வோர்லி ஆதிவாசி மக்கள் போராட்டம் ஆகியவை கம்யூ னிஸ்ட் இயக்க வரலாற்றில் வீரம் செறிந்த போராட்டங்களாகும். முதல் மூன்று போராட் டங்கள் விவசாயிகள், விவசாய தொழிலாளர் களின் போராட்டங்கள். வோர்லி போராட்டம் ஆதிவாசி மக்களின் போராட்டம். இப்போராட் டங்கள் இந்திய வரலாற்றில் எவ்வாறு புகழ் மிக்க வர்க்க போராட்டங்களாக இருந்தனவோ அதேபோல தமிழகத்தின் கீழத்தஞ்சை மாவட்டத்தில் (இன்றைய நாகை, திருவாரூர்) நடைபெற்ற விவசாயிகள், விவசாய தொழிலாளர்களின் போராட்டங்களும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய போராட்டங்களாக அமைந்தன. இப்போராட்டங்களின்போது சிவராமன், இரணியன், என்.வெங்கடாச்சலம் போன்ற பல கம்யூனிஸ்ட் போராளிகளை நிலவுடைமையாளர்கள் - ஆதிக்க சக்திகளின் தாக்குதல்களுக்கு செங்கொடி இயக்கம் பலி கொடுத்தது. குறிப்பாக, விவசாய தொழிலாளர்களின் போராட்டங்கள் வெறும் கூலிப் போராட்டங் களாக மட்டுமல்லாமல், பண்ணை அடிமை களாக இருந்த தலித் மக்களின் சமூக விடு தலைப் போராட்டங்களாகவும் அமைந்திருந் தது. இப்போராட்டங்களுக்கு தலைமையேற்ற வர்களாக பி.சீனிவாசராவ், பி.எஸ்.தனுஷ்கோடி, ஜி.வீரய்யன் போன்றவர்கள் விளங்கினார்கள். இப்போராட்டங்களின் வீச்சு பக்கத்தில் உள்ள தென்னாற்காடு மாவட்டத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதிலும் குறிப்பாக கடலூர் வட்டாரத்தில் இதன் தாக்கம் மிக அதிகம். இதற்கான ஏராளமான உதாரணங் களை இங்கு குறிப்பிட முடியும். தில்லை பகுதியில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்களின் போராட்டத்தை 1950களில் முன்னின்று நடத்திய இயக்கம் கம்யூனிஸ்ட் இயக்கம். கூடவே, தீண்டாமை, வன்கொடுமைகளுக்கு எதிரான சமூக உரி மைகளுக்கான போராட்டமாகவும் அது அமைந்திருந்தது.

எங்கெல்லாம் தீண்டாமை, வன்கொடுமை தலைவிரித்தாடியதோ அங்கெல்லாம் சீறிப்பாய்ந்து போராடுபவர் களாக கம்யூனிஸ்ட்டுகள் விளங்கினார்கள். இப்போராட்டங்களில் கள நாயகர்களாக டி.ராஜாராமன், பொன்னந்திட்டு சீனிவாசன் போன்றோர் விளங்கினர். பொன்னந்திட்டு கிராமத்தில் பிற்படுத்தப் பட்ட மக்களின் கெடுபிடி அதிகமாக இருந்தது. தலித் மாணவர்களிடம் பிற்படுத்தப் பட்ட மாணவர்கள் ஒரே மாதிரியான தட்டுகளில் உணவருந்துவதை தடுப்பதற்காக அவரவர் வீடுகளிலிருந்து தட்டுகளை கொண்டு வருமாறு நிர்பந்தம் செய்தனர். இத்தகைய தீண்டாமைக் கொடுமையை எதிர்த்து கம்யூனிஸ்ட்டுகள் போராடினார்கள். இதனால் ஏற்பட்ட நிர்பந் தம் காரணமாக வேறு வழியின்றி பள்ளியி லேயே அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான தட்டுகள் வழங்கப்பட்டன. செங்கல்மேடு கிராமத்தில் ஏராளமான தீண்டாமைக் கொடுமைகள் நிலவின. யாரா வது இறந்துவிட்டால் தலித் மக்கள் மேளம் அடிக்க வேண்டும். அங்குள்ள கோவிலுக்குள் தலித் மக்கள் நுழைய முடியாது. சாதி இந்துக் களின் தெருக்களில் தலித் மக்கள் செருப் பணிந்து செல்ல முடியாது. மாரியம்மன் கோவில் தீ மிதிப்பு விழாவில் தலித் மக்கள் பங்கேற்க முடியாது. சிவன் கோவிலில் நடை பெறும் அன்னதானத்தில் சாதி இந்துக்களுக்கு மட்டுமே இலை போட்டு பறிமாறுவார்கள். தலித் மக்களுக்கு மிச்ச உணவை அவரவர் தட்டுகளில் கொட்டுவார்கள். இத்தகைய சாதிய பாரபட்சங்கள் மற்றும் கொடுமைகளுக்கு எதிராக ஜி.கலியபெருமாள் தலைமையில் கம்யூனிஸ்ட்டுகள் ஏராளமான இளை ஞர்களை திரட்டி போராடினார்கள். இதனால், தலித் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி போக்கப்பட்டு அவர்களுக்கு சமத்துவம் நிலைநாட்டப்பட்டது. 1940களில் நெல்லிக்குப்பம் பாரி சர்க்கரை ஆலையில் தொழிலாளர்கள் தண்ணீர் அருந்த இரண்டு பானைகள் இருந்தன. தலித் தொழிலாளிகளுக்கு மண்பானை - அலுமினிய டம்ளர். மற்றவர்களுக்கு பித்தளை பானை - பித்தளை டம்ளர். இந்த அநீதியை கைவிட வலியுறுத்தி கம்யூனிஸ்ட் தொழிற்சங்க தலைவர் சி.கோவிந்தராஜன் நிர்வாகத்திடம் வாதாடினார். ஆனாலும், மாற்றம் ஏற்பட வில்லை. பிறகு, தொழிலாளர் துறை அதி காரிகளுக்கும், முதலமைச்சர் ராஜாஜிக்கும் கடிதம் எழுதினார். அப்போதும், மாற்றம் ஏற்படவில்லை. எனவே, வேறு வழியின்றி அங்கு வைக்கப்பட்டிருந்த மண் பானையை போட்டு உடைத்தார்கள்.

இதன்பிறகே, ஆலை நிர்வாகம் அனைத்து தொழிலாளர்களுக்கும் ஒரே மாதிரியான பானை - டம்ளர் ஏற்பாடு செய்தது. இன்னொரு கொடுமையும் அப்போது அந்த ஆலையில் நடந்தது. ஆலையில் சரிபாதி பேர் தலித்துகள். ஆனால் இவர்களுக்கு மிட்டாய் உற்பத்தி செய்யும் பிரிவில் வேலை தரமாட்டார்கள். காரணம், மிட்டாய் தீட்டுபட்டு இதர பகுதி மக்கள் வாங்கமாட்டார்களாம். இதற்கு எதிராகவும் சி.கோவிந்தராஜன் தலைமையில் தீவிரமான போராட்டங்கள் நடைபெற்றன. இதன்பிறகே, நிலைமையில் மாற்றம் ஏற்பட்டது. அக்காலத்தில் பாரி ஆலையில் நடைபெற்ற இந்த இரு போராட்டங்களும் சுற்றுவட்டாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. 1972ஆம் ஆண்டு செட்டிபாளையம் என்ற ஊரில் தலித் மக்கள் வாழும் பகுதியில் ஒரு திருமண விழா நடைபெற்றது. திருமண விழா வில் அவ்வூரை சார்ந்த ஆசிரியர் சண்முகம், ஆசிரியர் கலியமூர்த்தி, சபாபதி, அல்லா பிச்சை, துரைராஜ், நாகராஜ் ஆகியோர் பங்கேற்றதோடு அங்கு தலித் மக்களோடு சேர்ந்து பந்தியில் அமர்ந்து உணவருந்தினர். இதனால், ஆத்திரமடைந்த சாதி வெறியர்கள் ராகவ கவுண்டர் என்பவர் தலைமையில் ஆசிரியர் சண்முகத்தை கடுமையாக தாக்கினர். அப்பகுதியில் வாழ்ந்த தலித் மக்களையும் அவர்கள் தாக்கி னார்கள். இப்பிரச்சனை குறித்து காவல்துறை யிடம் புகார் செய்தபோது புதுப்பேட்டை காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க மறுத்து வெறியர்களுக்கு ஆதரவாக செயல்பட்டனர். காவல்துறையின் அக்கிரமத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும், திராவிட கழகமும் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தின. இதனால், மேலும் ஆத்திரமடைந்த சாதி வெறியர்கள் தலித் மக்களின் குடிசைகளை எரித்ததோடு, சிபிஐ(எம்) ஊழியர் சபாபதியையும் தாக்கினர். சாதி வெறியர்களை கண்டித்து சிபிஐ(எம்) சார்பாக நூற்றுக்கணக்கானோரை திரட்டி பாதயாத்திரை நடத்தப்பட்டது. பாத யாத்தி ரையை கைவிட ஆதிக்க சக்திகள் பல்வேறு முயற்சிகளை செய்தபோதிலும், சிபிஐ(எம்) அதைப் பொருட்படுத்தாமல் உறுதிகாட்டி யது. இறுதியாக பாதயாத்திரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றது. மாவட்ட ஆட்சியர் முதலில் வெளியே வந்து போராட்டக் காரர்களை சந்திக்க மறுத்தார். ஆயினும், பாத யாத்திரை சென்றவர்கள் உறுதியான நிலை எடுத்து போராட்டத்தை தொடர்ந்ததால் வேறு வழியின்றி மாவட்ட ஆட்சியர் வெளியே வந்து மைதானத்தில் போராட்டக்காரர்களை சந்தித்தார்.

அவர்கள் முன்வைக்கும் கோரிக் கைகளை ஏற்றுக்கொள்வதாகவும் அறி வித்தார். இதன் பின்னர்தான் தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் பலரும் கைது செய்யப்பட்டனர். தலித் மக்கள் குடியிருப்பு பகுதிக்கு காவல்துறை பாதுகாப்பும் வழங்கப் பட்டது. இதன்பிறகே, செட்டிபாளையம் கிராமத்தில் அமைதி திரும்பியது. தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக தொடர்ச்சியான பல போராட்டங்களை நடத்தி வந்த சிபிஐ(எம்) 1995இல் நூற்றுக்கணக் கான கிராமங்களில் கள ஆய்வுகளை மேற் கொண்டது. கள ஆய்வின் நிறைவாக தீண்டாமை ஒழிப்பு மாநாடு விருத்தாச்சலத்தில் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கானவர் கள் இம்மாநாட்டில் பங்கேற்றார்கள். தமிழக சிபிஐ(எம்) வரலாற்றில் தீண்டாமைக்கு எதி ராக ஏராளமான போராட்டங்கள் நடத்தப்பட்டி ருந்தாலும், தீண்டாமை ஒழிப்பு மாநாட்டை நடத்துவது இதுவே முதல்முறையாகும். மிக எழுச்சியோடு நடைபெற்ற மாநாடு இது. இதன்பிறகு, 1998இல் சேத்தியாதோப்பில் தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதிலும் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அப்போதைய சிபிஐ(எம்) மாவட்ட செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் என்.சங்கரய்யா, ஆர்.நல்லக்கண்ணு, எல்.இளையபெருமாள் ஆகிய தலைவர்கள் பங்கேற்று உரை யாற்றினர். இதற்கு முன்னதாகவே 1994இல் குறிஞ்சிப்பாடியில் தலித் பெண்கள் மாநாடு ஒன்றை அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் முன்னின்று நடத்தியது குறிப்பிடத் தக்கதாகும். 1998இல் நந்தீஸ்வர மங்கலத்தில் இரு தரப்பு மக்களிடையே சாதியக் கலவரம் மூண்டது. காரமணிக்குப்பம், பட்டாம்பாக்கம் பகுதிகளில் கலவரம் பரவி காவல் துறையின் துப்பாக்கிச் சூடும் நடைபெற்றது. பலர் காயமடைந்தனர். இக்கலவர சூழலை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கத்தோடு விருத்தாச்சலத்தில் தீண்டாமை ஒழிப்பு உண்ணாவிரதத்தை சிபிஐ(எம்) நடத்தியது. கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர் களோடு எல்.இளையபெருமாள் மற்றும் விருத்தாச்சலம் நகர திமுக, தமாகா, பிஎஸ்பி தலைவர்களும் பங்கேற்றனர். இதோடு நிற்கவில்லை சிபிஐ(எம்). பதட்டம் நிறைந்த அக்காலத்தில் (1999) நெய்வேலியில் தீண்டாமை ஒழிப்பு மத நல்லிணக்க பொதுக்கூட்டத்தை நடத்தியது. இப்பொதுக்கூட்டத்தில் கலைஞர் கருணாநிதி, என்.சங்கரய்யா, ஜி.கே.மூப்ப னார், ஆர்.நல்லக்கண்ணு, ஜி.ஏ.வடிவேலு உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று உரை யாற்றினர்.

பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இப்பொதுக்கூட்டத்தில் உரை யாற்றிய கலைஞர், மாவட்ட செயலாளர் என்.தனசேகரனின் வரவேற்புரையை பல முறை மேற்கோள் காட்டி பேசினார். தீண்டாமை ஒழிப்பு போராட்டக்களத்தில் சிபிஐ(எம்) வகித்த பங்கை அங்கீகரிப்ப தாக இருந்தது கலைஞரின் உரை. ஆயினும் சாதியபதட்டமும், வன்முறை யும் அதிகரித்து வந்த காலமாகவே அக்காலம் இருந்தது. 2000ஆம் ஆண்டு புளியங்குடி என்ற கிராமத்தில் மதியழகன்(35), காந்தி (30), வெள்ளையன் (20) ஆகிய மூன்று தலித் இளைஞர்கள் கொடூரமாக கொல்லப்பட்ட னர். ஒரு ஆலமரத்தடியில் தலை வேறு, முண்டம் வேறாக கொடூரமாக உடல்கள் கிடந்தன. இச்சம்பவத்தை அறிந்ததும், களத் திற்கு ஓடோடிச் சென்ற முதல் அரசியல் இயக்கம் சிபிஐ(எம்) ஆகும். குற்றவாளிகள் கைது, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவார ணம் ஆகியவற்றை வலியுறுத்தி சிதம்பரம், கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம், நெய்வேலி என பரவலாக கண்டன ஆர்ப்பாட்டங்களை  யும், ஊர்வலங்களையும் சிபிஐ(எம்) நடத்தியது.  கட்சி எடுத்துக் கொண்ட முயற்சிகளால் இந்தவழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதர அரசியல் இயக்கங்களையும் இணைத்துக் கொண்டு பந்த் போராட்டம் அறிவிக்கப்பட்டது. உரிய நடவடிக்கை எடுப்ப தாகவும் பந்த் போராட்டத்தை கைவிடுமாறும் அப்போதைய தமிழக அரசு வேண்டுகோள் விடுத்தது. இதனால், பந்த் போராட்டம் கைவிடப்பட்டது. இதன்பின் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் அவர் களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப் பட்டது. ஆனால், உயர்நீதிமன்றமோ அவர்களை விடுதலை செய்தது.

இவ்வாறு சாதிய கொடுமைகளை எதிர்த்து போராடிக் கொண்டே கலவரச் சூழ்நிலையை தணிக்க வும் சிபிஐ(எம்) கடும் முயற்சிகளை மேற்கொண் டது.இக்காலத்தில்தான் சிபிஐ(எம்) மீது கடுமையான அவதூறுகளை கூறி விமர்சனம் செய்தவர் டாக்டர் ராமதாஸ். 2012ஆம் ஆண்டு பாச்சாரப்பாளை யம் கிராமத்தில் தலித் இளைஞர்கள் சிலர் காவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த சாதிய சக்திகள் தலித்துகளுக்கு போலிஸ் வேலையா? எனக் கேட்டு அவர்களின் வீடுகளை தாக்கினர். இத்தாக்குதலை கண்டித்து சிபிஐ(எம்), சிபிஐ சார்பாக பல இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நல்லாத்தூர் என்ற கிராம தலித் மக்களுக்கு பல்வேறு தீண்டாமைக் கொடுமைகள் நிலவின. தேநீர் கடைகளில் இரட்டைக் குவளை முறை இருந்தது. சலூன்களில் தலித் மக்களுக்கு முடி வெட்ட மறுத்ததால் அவர்கள் புதுச்சேரி சென்று முடிவெட்ட வேண்டியிருந் தது. பொது வழியை தலித்துகள் பயன்படுத்த தடை இருந்தது. இக்கொடுமைகளுக்கு முடிவுகட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கே.மாதவன் தலைமையில் காத்தி ருக்கும் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு இரட்டைக் குவளை முறையை முடிவுக்கு கொண்டு வந்ததோடு, சலூன்களில் தலித்துகளுக்கு முடி வெட்டுவதையும் உறுதி செய்தார். போராட்டம் நடத்திய தலித் இளைஞர்கள் மீது போடப்பட்டிருந்த வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்பட்டன. சிதம்பரம் காவல்நிலையத்தில் தலித் பெண் பத்மினியின் கணவர் நந்தகோபால் காவ லர்களால் மனைவியின் முன்னாலேயே அடித்துக் கொல்லப்பட்டார். பல காவலர்கள் அப்பெண்ணை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தினர். இப்பிரச்சனை சிபிஐ(எம்) கவனத்திற்கு வந்தபோது அப்போதைய மாவட்ட செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் உடனடியாக தலை யிட்டனர்.

பல போராட்டங்கள் நடத்தப்பட்ட தோடு நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி தவறி ழைத்த காவலர்களுக்கு தண்டனை கிடைக்க ஏற்பாடு செய்தனர். இதுமட்டுமல்ல, அப்பெண்மணிக்கு அரசு வேலையும், நிவா ரணமும் கூட சிபிஐ(எம்) முயற்சியால் கிடைத்தன. அப்பெண்ணின் மறுவாழ்விற்கு கட்சி ஏற்பாடு செய்தது. இன்று அப்பெண் சமூகத்தில் தலை நிமிர்ந்து வாழ முடிகிறது என்றால் அதற்கு கட்சி எடுத்த முயற்சிதான் காரணம். தலித் மக்களின் பிரச்சனைகள் மட்டுமல் லாது, பழங்குடியினரின் பல்வேறு பிரச்சனை களிலும் சிபிஐ(எம்) தலையிட்டு நீதி கிடைக்க போராடியது. குறிப்பாக, ராஜாக்கண்ணு வழக்கை குறிப்பிட முடியும். இவர் ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு விருத்தாச்சலம் வட்டம், கம்மாபுரம் காவல்நிலையத்தில் விசாரணை என்ற பெயரால் காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த காவல் நிலைய படுகொலையை மூடி மறைத்து அவர் விசாரணையின்போது தப்பி ஓடிவிட்ட தாக காவல்துறையினர் கதை புனைந்தனர். இப்பிரச்சனை சிபிஐ(எம்) கவனத்திற்கு வந்த போது கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலை வர்கள் தலையிட்டு உண்மையை வெளிக் கொணர தீவிர முயற்சிகளை மேற்கொண்ட னர். காவல்துறையினரை கண்டித்து போராட் டங்கள் நடைபெற்றதோடு நீதிமன்ற வழக்கும் நடைபெற்றது. அப்போதைய பிரபல வழக்கறி ஞர் சந்துரு இந்த வழக்கில் வாதாடினார். கட்சியின் தலைவர்களில் ஒருவரான கோவிந்த னின் பங்களிப்பும் இப்பிரச்சனையில் முக்கிய மானது. இறுதியில், நீதிமன்ற வழக்கு மூலம் உண்மை வெளிக்கொணரப்பட்டு ராஜாக் கண்ணுவை தாக்கிய காவல்துறை அதி காரிக்கு தண்டனை கிடைத்தது. ராஜாக் கண்ணு குடும்பத்திற்கு ரூ.21 லட்சம் வரை நிவாரணம் கிடைத்தது. இந்த பிரச்சனையும், இது தொடர்பான வழக்கும் தமிழக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வுகளா கும்.

இந்த மொத்தச் சம்பவங்களும் தற்போது ஜெய்பீம் திரைப்படமாக வெளிவந்து மக்களின் பாராட்டுதல்களை பெற்றது. 2007இல் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இம்மாவட்டத் தில் பல்வேறு போராட்டங்களை நடத்தி தலித் மக்களுக்கு நியாயத்தையும், உரிமைகளை யும் மீட்டுத் தந்தது. சேத்தியாதோப்பு தலித் இளைஞன் கோபாலகிருஷ்ணன் மரணம் குறித்த பிரச்சனை இதில் முக்கியமானதாகும். திருமூட்டம், அம்புஜவல்லிபேட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழாவையொட்டி நடைபெற்ற விளையாட்டு போட்டியில் தலித் மாணவர்கள் பங்கேற்க கூடாது என ஆசிரியர் ஒருவர் தடை விதித்தார். இத்தடையை எதிர்த்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராடியது. இதனால், அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். இவை மட்டுமல்ல, இக்காலங்களில் ஏராளமான பிரச்சனைகளில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலையிட்டு பல்வேறு இயக்கங்களை நடத்தியுள்ளது, பல வெற்றி களையும் பெற்றுள்ளது. தீண்டாமை ஒழிப்பு என்பது ஒரு சமூகப் பிரச்சனை மட்டுமல்ல, வர்க்க பிரச்சனையும் கூட. தீண்டாமை என்பது ஒரு நிலப்பிரபுத்துவ கண்ணோட்டமாகும். எனவே, தீண்டாமை ஒழிப்பு போராட்டம் என்பது வர்க்க போராட் டத்தின் பிரிக்க முடியாத பகுதியாகும். இப்பார் வையில்தான் கடலூர் மாவட்டத்திலும் ஏராள மான பிரச்சனைகளில் தொடர்ச்சியாக சிபிஐ(எம்) - வர்க்க வெகுஜன அமைப்புகள் - தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலையிட்டு தலித் மக்களுக்கு சமூக உரிமைகளையும், நீதியையும் பெற்றுத் தந்துள்ளது. இம்மாவட்ட  இயக்க பணிகளில் இச்சாதனைகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

;