திருப்பூர், ஜூலை 16- கோபிசெட்டிப்பாளையத்தில் வாழ்ந்து மறைந்த சுதந்திரப் போராட்ட வீரர், தாழ்த்தப்பட்ட மக் கள் வாழ்க்கை மேம்பாட்டுக்காக பாடுபட்ட தியாக சீலர் லெட்சுமணய் யருக்கு முழு உருவச் சிலை மற்றும் மணி மண்டபம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. திருப்பூர் அருகே இடுவாய் ஊராட்சி சீராணம்பாளையத்தில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தொகுதி மேம் பாட்டு நிதியில் கட்டப்பட்ட பல் நோக்கு வளர்ச்சி மையக் கட்டி டத்தை திறந்து வைக்க அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வியாழனன்று வருகை தந்தார். அப்போது கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் முன்னிலையில், தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாநி லத் துணைத் தலைவர் யு.கே.சிவ ஞானம், மாநில செயலாளர் சி.கே.கனகராஜ் ஆகியோர் சார்பில் அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இம்மனுவில் கூறியிருப்பதா வது: ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கடந்த 1917 பிப்ரவரி 22இல் பிறந்து தன்னலம் கருதாது வாழ்ந்து கடந்த 2011ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் நாள் மறைந்த வர் லட்சுமணய்யர். நூற்றாண்டு கடந்து விட்ட நிலையிலும் கோபி பகுதி மக்களின் மனதில் மறையா மல் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தனது பூர்வீக சொத்துகளின் நிலங்களை தானமாக வழங்கிய தில், இந்நகரப் பகுதியில் அநேக பள் ளிகள், ஐடிஐ, பட்டியலின மாண வர் உண்டு, உறைவிடப் பள்ளியுடன் தங்கும் விடுதி, அரசு அலுவலகங் கள், பிரதான குடிநீர் நிலையம், நக ராட்சி அலுவலகக் கட்டிடம் ஆகி யவை கட்டப்பட்டு செயல்பட்டு வரு கின்றன.
மனிதக்கழிவை மனிதன் அகற்றும் கொடுமைக்கு முடிவு
1952 - 55 மற்றும் 1986 – 91 கால கட்டங்களில் கோபிசெட்டிபாளை யம் நகர்மன்றத் தலைவராக பணி யாற்றிய காலத்தில் மனித கழிவு களை மனிதனே அகற்றும் இழிவான கொடுமைக்கு முடிவு கட்டி சாதனை படைத்ததால், குடியரசுத் தலைவ ரின் விருதைப் பெற்றவர். எனவே மறைந்த சுதந்திரப் போராட்ட தியாகி ஜி.எஸ்.லட்சு மணய்யருக்கு கோபிசெட்டிப் பாளையம் நகராட்சி மையப் பகுதி யில் முழு உருவ வெண்கலச் சிலை யும், மணி மண்டபமும் அரசு செல வில் அமைத்துத் தருவதற்கு ஆவன செய்ய வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக மார்க்சிஸ்ட் கட்சி யின் சட்டமன்றக்குழுத் தலைவர் நாகை மாலி இதே கோரிக்கையை வலியுறுத்தி முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார். கோவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனும் இதே கோரிக்கையை வலியுறுத்தி முதல்வருக்கு மனுக் கொடுத்தி ருக்கிறார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரியும் கோபிசெட்டிப்பாளையம் லட்சும ணய்யரின் சேவைகளை இளைய தலைமுறையினருக்கு தெரி விக்கும் வகையில் கோபிசெட்டி பாளையத்தில் முழு உருவ வெண் கலச் சிலையும், மணி மண்டபமும் அமைக்க வேண்டும் என்று வலி யுறுத்தி கேட்டுக் கொண்டிருக்கி றார். பல்வேறு தரப்பினரின் தொடர் கோரிக்கையாக இருக்கும் நிலை யில் கோபி தியாக சீலர் லட்சும ணய்யருக்கு முழு உருவ வெண் கலச் சிலையும், மணி மண்டபமும் அமைத்து தர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வலுப் பெற்று வருகிறது.