இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர், விடுதலைப் போராட்ட வீரர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவர் தோழர் என்.சங்கரய்யா இன்று (ஜூலை 15) தமது 102வது அகவையில் அடியெடுத்து வைக்கிறார். வாழும் வரலாறாகத் திகழும் தோழர் சங்கரய்யாவுக்கு நாடு முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள், தோழர்கள், அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உட்பட தமிழக மக்கள் வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளனர்.