tamilnadu

img

பூமிப்பந்து சந்தித்திராத போராட்டம் - ச.வீரமணி

ஒன்றிய பாஜக அரசின்  மக்கள் விரோத  வேளாண் சட்டங்களை எதிர்த்து தில்லியில் ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்தில் இன்னுயிர் ஈந்த நூற்றுக் கணக்கான விவசாயப் பெரு மக்களுக்கு இந்நூலைக் காணிக்கையாக்கியுள்ளார் நூலாசிரியர் தோழர் இரா. ஜோதி. நாட்டில் விவசாயி களுக்காக செயல்பட்டுவந்த ஐநூறுக்கும் மேற்பட்ட சங்கங்கள் தங்கள் வேற்றுமைகளை மறந்து,  விவசாயிகளுக்கு விரோத மாகவும், விவசாயத்திற்கு விரோத மாகவும் ஆணவத் துடன் செயல்பட்டுவந்த ஒன்றிய பாஜக அரசாங்கத் துக்கு எதிராகப் போராடி, அரசின் சதித்திட்டங்களை முறியடித்து, வரலாறு படைத்திட்ட இப் போராட்டம் குறித்து மிகச்சிறப்பான முறையில் ஆவணப்படுத்தி இருக்கிறார்.

இப்புத்தக வெளி யீட்டு விழாவில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ. சண்முகம் குறிப்பிட்டதைப் போல, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் ஒப்பற்ற தலைவர்களில் ஒருவராக விளங்கிய இரா. ஜோதி, விவசாயிகளின் பிரச்சனை களை நுணுகி ஆராய்ந்து இந்நூலை படைத்திருப்பது அற்புதமானதும் வித்தியாச மானதுமாகும்.   இப்புத்தகத்திற்குத் தந்துள்ள தலைப்பு போன்றே வீர வரலாறு படைத்திட்ட விவசாயிகள் போராட்டம் இந்த பூமிப் பந்து இதற்கு முன் சந்தித்திராத மாபெரும் போராட்டமாகும். இதனை ஒவ்வொரு தோழரும் வாங்கி படிப்பதோடு, இப்போராட்ட வரலாற்றை போராடும் அனைத்து வர்க்கத்தினரி டமும் எடுத்துச் செல்ல வேண்டி யதும் அவசியமாகும்.

பூமிப்பந்து சந்தித்திராத போராட்டம்
ஆசிரியர் : இரா.ஜோதி
விலை: ரூ.240/-
கிடைக்குமிடம்: 
ரோஸ் D1, ஆர்.சி.மேத்தா கிரின் மார்க்,  1, மில்க் காலனி சாலை,  மாதவரம், சென்னை-600 051. பேசி: 9444112248.