இந்திய பொருளாதாரம் குறித்து படா டோப அறிவிப்புகளை வெளியிடுவது மோடி அரசுக்கு வாடிக்கை. “விக்சித் பாரத்” எனப்படும் வளர்ச்சி அடைந்த இந்தியா என்பது பாஜக அரசு திரும்பத்திரும்ப முன் வைக்கும் தற்போதைய முழக்கம். 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சி அடைந்த தேசமாக பரிணமித்துவிடும் எனும் கருத்து பிரச்சாரமாக முன்வைக்கப்படுகிறது. வளர்ச்சி அடைந்த தேசமாக இந்தியா மாற வேன்டும் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இட மில்லை. ஆனால் இந்தியாவின் இன்றைய பொருளாதாரம் அந்த திசை நோக்கி நகர்கிறதா என்பதுதான் முக்கிய கேள்வி.
வளர்ந்த தேசம் என்றால் என்ன?
தேசங்களின் வளர்ச்சித் தன்மை குறித்து 2022ஆம் ஆண்டு உலக வங்கி கீழ்கண்ட வாறு வரையறுத்துள்ளது: இந்தியாவின் தனி நபர் சராசரி வருமானம் 2,390 டாலர்கள். எனவே இந்தியா இப்பொ ழுது கீழ்மட்ட நடுத்தர வருமானம் உள்ள தேசமாகவே உள்ளது. முதலில் உயர்மட்ட நடுத்தர வருமான பிரிவுக்கும் பின்னர் உயர் வருமான பிரிவுக்கும் இந்தியா சென்றால்தான் அது வளர்ச்சி அடையும் தேசமாக மாறும். 2047க்குள் அது சாத்தியப்பட வேண்டுமா னால் என்ன செய்ய வேண்டும் என்பதே இந்தியா முன் உள்ள சவால்கள். 2015ஆம் ஆண்டு 1,590 டாலராக இருந்த இந்தியாவின் தனி நபர் சராசரி வருமானம் 2022ஆம் ஆண்டு 2,390 டாலராக உயர்ந்தது. அதாவது ஆண்டுக்கு வளர்ச்சி விகிதம் 6%. இதே வளர்ச்சி தொடருமானால் 2047ஆம் ஆண்டு இந்தியாவின் தனி நபர் சராசரி வருமானம் 10,450 டாலராக உயரும் என மதிப்பிடப்படுகிறது. அதே சமயத்தில் 2047ஆம் ஆண்டு நடுத்தர தேசத்தின் தனி நபர் சராசரி வருமான வரம்பு கீழ்மட்டத்தில் 6,411 டாலராகவும் மேல் மட்டத்தில் 20,086 டாலராகவும் இருக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது. இதன் பொருள் என்னவெனில் தற்போதைய வளர்ச்சி தொடருமானால் 2047ஆம் ஆண்டு இந்தியா உயர்மட்ட நடுத்தர தேசமாக கூட பரிணமிக்க முடியாது. கீழ்மட்ட நடுத்தர வருமானம் உள்ள தேசமாகவே இருக்கும். பின்னர் எப்படி உயர் வருமான தேச மாக அதாவது வளர்ந்த தேசமாக பரிணமிக்க முடியும்? அந்த இடத்தை அடைய வேண்டு மானால் இந்தியாவின் வளர்ச்சி ஆண்டுக்கு 9% ஆக இருக்க வேண்டும். பாஜகவின் ஆட்சி யில் வளர்ச்சி 5.8% ஆக மட்டுமே உள்ளது. எனவே “வளர்ந்த தேசம்” எனும் பெயரில் சாத்தியமற்ற கனவை விற்க பாஜக அரசு முயல்கிறது என்பது தெளிவு!
பிரிக்ஸ் நாடுகளில் இந்தியாவின் நிலை:
வளர்ந்த நாடுகளை தவிர்த்துவிட்டு பிரிக்ஸ் நாடுகளுடன் ஒப்பிட்டால் கூட இந்தியாவின் வளர்ச்சி கவலை தரும் விதத்தில்தான் உள்ளது: k மனிதவள மேம்பாடில் கடைசி இடம். k தனி நபர் சராசரி ஜி.டி.பி.யில் கடைசி இடம் k உழைப்பு பங்கேற்பு அதாவது வேலை வாய்ப்பு உருவாக்குவதில் கடைசி இடம். k வறுமையில் முதல் இடம். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை சிதைத்த மோடி அரசாங்கம் 2047இல் “வளர்ந்த தேசமாக” மாற்றுவோம் எனக் கூறுவது நகைப்புக்குரிய ஒன்றல்லவா?
பலனளிக்காத “மேக் இன் இந்தியா”
2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதலில் மோடி அரசாங்கம் உலக உற்பத்தியை மேட் இன் இந்தியா “Made in India” ஆக மாற்றுவோம் என முழக்கமிட்டது. ஆனால் சில நாட்களிலேயே “Made in India”வை மேக் இன் இந்தியா “Make in India”வாக அரசு மாற்றிவிட்டது. இரண்டுக்கும் உள்ள வேறுபாடு கள் என்ன? இதனை தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்கள் மிக தெளிவாக விளக்கி னார். “Made in India” எனில் அனைத்து உற் பத்தியையும் நமது சொந்த தொழில்நுட்பம் மற்றும் மூலதனம் மூலம் நமது நாட்டிலேயே சாதிப்பது. “Make in India” எனில் அந்நிய நாடு களின் மூலதனம் மற்றும் தொழில்நுட்பம் மூலம் இந்தியாவில் உற்பத்தி செய்வது. அதாவது அந்நிய நாடுகளுக்கு எல்லையின்றி நமது உற்பத்தி வாய்ப்புகளையும் சந்தை களையும் திறந்துவிடுவது. தொழில் உற்பத்தி யின் முன்னேற்றம் என்பது வளர்ந்த தேசமாக பரிணமிப்பதற்கு மிக அவசியமானது ஆகும். மேக் இன் இந்தியா தொழில்துறை வளர்ச்சி யை மையப்படுத்தி அறிவிக்கப்பட்ட படாடோப அறிவிப்பு. அவ்வாறு 10 ஆண்டுகளுக்கு முன்பு மோடி அரசாங்கம் அறிவித்த மேக் இன் இந்தியா எனும் முழக்கத்தின் நோக்கம் என்ன? 1.ஜி.டி.பி.எனப்படும் ஒட்டு மொத்த தேசத்தின் உற்பத்தியில் ஆலை உற்பத்தி யின் பங்கை 15% லிருந்து 25% ஆக உயர்த்துவது. இது நடந்ததா எனில் இல்லை. ஆலை உற்பத்தியின் பங்கு ஜி.டி.பி.யில் 15 முதல் 17% என்ற அளவிலேயே தேங்கியுள்ளது. ஆலை உற்பத்தியின் மதிப்பு கூட்டலும் 2001-12 கால கட்டத்தில் 8.1% ஆக இருந்தது பாஜக ஆட்சியில் 5.5% ஆக சரிந்துள்ளது.
2. மேக் இன் இந்தியாவின் அடுத்த நோக்கம் தொழில்துறையில் 10 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவது.
இது நடந்ததா? இதுவும் நடக்கவில்லை. ஆலை உற்பத்தியின் வேலை வாய்ப்புகள் 2012-2023 காலகட்டத்தில் 12.6% லிருந்து 11. 4% ஆக சரிந்துவிட்டது. குறிப்பாக 82 லட்சம் முறைசாரா வேலை வாய்ப்புகள் காணாமல் போய்விட்டன. கடந்த 5 ஆண்டுகளில் விவசாய வேலை வாய்ப்புகள் 42.5%லிருந்து 45.8% ஆக அதிகரித்துள்ளன. இது கவலை தரும் அம்சமாகும். ஒரு சமூகம் முன்னேறுகிறது எனில் அதில் விவசாய வேலை வாய்ப்பு களைவிட தொழில்துறையில் வேலை வாய்ப்பு கள் அதிகரிக்க வேண்டும். இதுதான் இந்தி யாவிலும் 2017க்கு முன்பு வரை நடந்தது. ஆனால் இப்பொழுது விவசாயத்தை நோக்கி உழைப்பாளிகள் திரும்புகின்றனர் எனில் பொருள் என்ன? ஆலை உற்பத்தியில் வாய்ப்பு கள் இல்லை அல்லது குறைந்துவிட்டன என பொருள். ஒருபுறம் ஆலை உற்பத்தியின் மதிப்புக் கூட்டல் 6.25லிருந்து 3.5% ஆக சரிந்துள் ளது. மறுபுறத்தில் மூலதன உருவாக்கம் 4.5%லிருந்து 0.3%ஆகச் சரிந்துள்ளது. வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல முக்கிய துறைகளின் உற்பத்தி கடந்த 42 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது. பல நிபுணர்கள் இந்தியா “தொழில் சிதைவை” (Deindustrialization) சந்திக்கிறதா எனும் கவலையை எழுப்பு கின்றனர். இத்தகைய சூழலில் “விக்சித் பாரத்” எப்படி சாத்தியம்?
மக்களின் வாழ்வு நிலை
ஜி.டி.பி. வளர்ச்சி அல்லது தொழில் வளர்ச்சி தானாகவே மக்களின் வாழ்வில் முன்னேற் றத்தை தந்துவிடாது. வளர்ச்சியின் பலன்கள் பொருத்தமான முறையில் விநியோகம் செய்யப்பட்டால்தான் இந்த வளர்ச்சி மக்க ளுக்கு பயன்படும். இந்த அம்சத்தில் மோடி அரசின் திட்டங்களும் நடைமுறைகளும் எந்த வகையிலும் மக்களுக்கு பலனளிக்கவில்லை. அதற்கு முக்கிய காரணம் இந்த அரசு கடைப் பிடிக்கும் நாசகர நவீன தாராளமய பொரு ளாதாரக் கொள்கைகளும் கூட்டுக் கொள்ளை முதலாளித்துவமும் காரணம் ஆகும். கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார அசமத்துவம் தீவிரமடைந்துள் ளது. உயர்மட்ட 10% செல்வந்தர்கள் 65% செல்வத்தை வளைத்துள்ளனர். ஆனால் அடிமட்ட 50% உழைப்பாளிகளிடம் வெறும் 6% செல்வம் மட்டுமே உள்ளது. சாதாரண உழைப்பாளி மக்களிடம் வாங்கும் சக்தி மிகக்குறைவாக இருப்பதால் பொருளாதார வளர்ச்சியில் தேக்கம் ஏற் பட்டுள்ளது. இது தொழில் உற்பத்தியை பாதிக்கிறது. மறுபுறத்தில் வேலை வாய்ப்புகள் தேவையான அளவு உருவாக்கப்படவில்லை. அவ்வாறு உருவாக்கப்படும் வேலைகளும் மிகக்குறைந்த வருமானம் கொண்டதாகவும் முறைசாரா வேலை வாய்ப்புகளாகவும் உள்ளன. விவசாயமும் கடுமையான பின்ன டைவை சந்தித்து வருகிறது. கல்வியிலும் மருத்துவத்திலும் அரசின் முதலீடு சரிந்து வருவதால் கருத்தாலும் கரத்தாலும் உழைக்கும் தரமான அறிவுசார் உழைப்பா ளிகளை உருவாக்குவதில் சரிவு ஏற்பட்டுள் ளது. இதுவும் பொருளாதார முன்னேற்றத்தை பாதிக்கிறது. இத்தகைய பாதகமான சூழல்கள் தொடர்ந்தால் “வளர்ந்த தேசம்” என்பது கானல் நீராகவும் பாஜக அரசின் வாய்ப்பந்தலாகவுமே இருக்கும்.
அரசு செய்ய வேண்டியது என்ன?
அரசு உண்மையிலேயே இந்திய பொரு ளாதாரத்தை முன்னேற்ற வேண்டுமெனில் கீழ்க்கண்ட முனைப்புகளை அமலாக்குவது அவசியம்:
l அரசு முதலீடுகளை உள்கட்டமைப்பு திட்டங்களில் பெருமளவு அதிகரித்தல்; அதன் மூலம் தனியார் முதலீடுகளை ஈர்த்தல்.
lஇந்த முதலீடுகள் மூலம் வேலைவாய்ப்புகளை பெருக்குதல். குறிப்பாக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் சிறு/குறு/நடுத்தர தொழில்களுக்கு முன்னுரிமை தருதல்.
l மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்தல்.
lகல்விக்கும் மருத்துவத்துக்கும் முதலீடுகளை அதிகரித்தல்.
l கரத்தாலும் கருத்தாலும் உழைக்கும் தரமான அறிவுசார் உழைப்பாளிகளை உருவாக்குதல்.
l கல்விக்கும் தொழிலுக்கும் உள்ள இணைப்பை ஏற்படுத்துதல்.
lவிவசாயிகளின் வளர்ச்சியை உத்தரவாதப்படுத்தும் வகையில் விவசாய முதலீடுகள்.
l கூட்டுக் கொள்ளை முதலாளித்துவத்துக்கு தடை போடுதல்.
இது போன்ற பல முனைப்பு களை அமலாக்குவதன் மூலம்தான் குறைந்த பட்சம் உயர்மட்ட நzடுத்தர பொருளாதார தேசமாக இந்தியாவை பரிணமிக்க வைக்க முடியும். பாஜக அரசாங்கம் இதனை செய்யுமா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. திணறும் பொருளாதாரத்தை சீர்படுத்தும் திசை தெரியாமல் பாஜக அரசு உள்ளது. மத வாதம் அடிப்படையிலும் சாதிய உள்முரண்பாடு களை திறமையாக பயன்படுத்துவதன் மூல மும் அரசியல் வெற்றி அடையலாம் என பாஜக கணக்கு போடுகிறது. எனினும் மக்கள் எப்பொழுதுமே பொருளாதார பிரச்சனைக ளைவிட மதத்துக்கும் சாதியத்துக்கும்தான் முக்கியத்துவம் தருவார்கள் என பாஜக எண் ணினால் அது பகல் கனவாகவே அமையும்.