tamilnadu

img

வாழ்வில் முதல் 1000 நாட்கள் திட்டம்

சென்னை, ஜூலை 2- “வாழ்வில் முதல் 1000 நாட்கள்” சிறப்பு திட்டத்தை தமிழ்நாடு மாநில அரசு தொடங் கியது. ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் பொது சுகாதாரம் நோய் தடுப்பு மருந்து துறை திட்ட குழு சார்பில் வாழ்வில் முதல் 1000 நாட்கள் என்ற புதிய திட்டத்தின் அறிமுக விழா மற்றும் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பேசிய  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், தமிழ்நாட்டில் 14 மாவட்ட ங்களில் 118 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 478 துணை சுகாதார நிலையங்கள் மூலம் கடந்த இரு ஆண்டுகளில் 74,400 குழந்தை கள் பிறந்துள்ளன. வாழ்வில் முதல் 1000 நாட்கள் திட்டத்தின்  மூலம் 38.20 கோடி மதிப்பீட்டில் தாய்மார்கள் பயன் பெறுவார்கள் என தெரிவித்தார். மேலும், கர்ப்ப காலம் முதல் மகப்பேறு முடிந்து ஒருவருடம் வரை உள்ள 1000 நாட்கள் மூன்று காலங்களாக கணக்கிட்டு, அந்த காலத்தில் 7 தவணைகளாக தலா ரூ.5,000 இத்திட்டத்தின் மூலம் வழங் கப்பட உள்ளது. அதேபோல், தாய்மார்களுக்கு கர்ப்ப கால ரத்த சோகை, பேறுகால எடை குறைவு, குழந்தையின் முறையான வளர்ச்சி மற்றும் தடுப்பூசி   ஆகியவை தாய்மை செயலி மூலம்  கண்காணித்து, சிக்கல் உள்ளவர்கள் ஆரம்ப  சுகாதார நிலையத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படும் எனக் கூறிய அவர், எதிர் காலத்தில் வாழ்வில் முதல் 1000 நன்நாட்கள் பயனுள்ளதாக இருக்கும் என்றார். தமிழ்நாட்டில் உள்ள மருத்துவர் பற்றாக் குறையை போக்க காலியாக உள்ள 1,021 மருத்துவர்கள் மற்றும் 980 மருந்தாளுநர்கள் கூடிய விரைவில் பணியமர்த்தப்பட்டு பணி ஆணைகள் வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.