கடலூர், ஜூன் 1 - கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த 2021-2022 நிதியாண்டில், ‘என்எல்சி இந்தியா’ (Neyveli Lignite Corporation India Limited) நிறுவனம், ரூ. 1,237 கோடி நிகர லாபம் ஈட்டி சாதனை படைத்துள்ளது. இது முந்தைய நிதியாண்டின் லாபத்தை விட 22 சதவிகிதம் அதிகம் ஆகும். என்எல்சி இந்தியா நிறுவனம், தனது துணை நிறுவனங்களையும் சேர்த்து அதிக பட்சமின் உற்பத்தி, மின்சக்தி ஏற்றுமதி, நிலக்கரி உற்பத்தி, பழுப்பு நிலக்கரி விற்பனை போன்ற துறைகளில் 2021-22-ஆம் நிதியாண்டில், அதன் வரலாற்றில் புதிய சாதனைகளைப் படைத்துள்ளது. என்எல்சி இந்தியா 2021-22 நிதி யாண்டில் ரூ. 10 ஆயிரத்து 662 கோடியை மொத்த வருவாயாக ஈட்டியுள்ளது. இது கடந்த 2020-21 நிதியாண்டில் ஈட்டப்பட்ட மொத்த வருவாயான ரூ. 8 ஆயிரத்து 967 கோடியை விட 19 சதவிகிதம் அதிகம் ஆகும்.
அதேபோல 2021-22 நிதியாண்டில், இந்நிறுவனம் முந்தைய நிதியாண்டை விட 22 சதவிகிதம் அதிகமான நிகர லாப த்தை பெற்றுள்ளது. அதாவது, முந்தைய 2020-21 நிதியாண்டில் ரூ. 1,010 கோடியை நிகர லாபமாகப் பெற்றிருந்த நிலையில், 2021-22 நிதியாண்டில் ரூ. 1,237 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. என்எல்சி இந்தியா நிறுவன நிலக்கரி சுரங்கத்தில், ஒரு ஆண்டில், 63 லட்சத்து 50 ஆயிரம் டன் நிலக்கரி வெட்டி எடுத்த தும், ரூ. 830 கோடிக்கு விற்பனை செய்த தும் இந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட புதிய சாதனைகளாகும். பழுப்பு நிலக்கரியைப் பொறுத்த வரையில், முந்தைய 2020-21 நிதி யாண்டை விட 30 சதவிகிதம் அதிகமாக வெட்டி எடுத்து, ரூ. 824 கோடிக்கு விற் பனை செய்யப்பட்டு, அத்துறையிலும் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. 2022 மார்ச் 31-ஆம் தேதியுடன் நிறை வடைந்த நிதியாண்டில், என்எல்சி இந்தியா நிறுவன மின் நிலையங்கள் மட்டும் 2,502 கோடியே 20 லட்சம் யூனிட் மின்சக்தியை உற்பத்தி செய்து, அவற்றில் 2,204 கோடியே 10 லட்சம் யூனிட் மின்சக்தியை மின்வாரியங்களுக்கு விற்பனை செய்துள் ளது. இது முந்தைய ஆண்டைவிட முறை யே 29, 32 சதவிகிதம் அதிகமாகும். என்எல்சி இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனங்களையும் சேர்த்து, 2021-22 நிதியாண்டில் ரூ. 12 ஆயிரத்து 546 கோடி மொத்த வருவாய் ஈட்டப் பட்டுள்ளது. முந்தைய 2020-21 நிதியா ண்டில் ஈட்டப்பட்ட மொத்த வருவாயான ரூ. 11 ஆயிரத்து 798 கோடியை விட, இது 6 சதவிகிதம் அதிகம் ஆகும்.