tamilnadu

img

2 லட்சம் ஏக்கரும் 4 லட்சம் குடும்பங்களும் - வி.முருகன்,

விருதுநகர் மாவட்டத்தின் மேற்கு பகுதியில் ஆற்றுப் பாசன விவசாயம், பம்ப் செட் விவசாயம், கிழக்குப் பகுதியில் மானாவாரி விவசாயம், மாவட்டத்தில் சிறுபகுதி தோட்டக்கலை விவசாயம் என 4 லட்சம் குடும்பங்கள் விவசாயத்தையே வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருகின்றன. 

மேற்குப் பகுதியில் நெல், வாழை, தென்னை, கரும்பு போன்ற பயிர் களும், கிழக்குப் பகுதியில் கடலை, வெங்காயம், நெல் எனவும், தெற்குப் பகுதியான சாத்தூர் அருப்புக் கோட்டை, வெம்பக்கோட்டை பகுதி களில் மக்காச்சோளம் என சுமார் 2 லட்சம் ஏக்கருக்கு மேல் விவசாயம் நடைபெறுகிறது. நீராதாரம் மிக முக்கிய பிரச்சனையாக உள்ளது.  ஒன்றிய, மாநில அரசுகள் ஆறு களைத் தூர்வாரி அணைகளுக்கு நீர் வரத்தை அதிகரிக்க தனி கவனம் செலுத்திட வேண்டும். மேலும், காவிரி, வைகை, குண்டாறு, தெற் காறு, வைப்பாறு இணைப்புத் திட்டம், செண்பகவள்ளி அணைத் திட்டம் ஆகியவற்றை முழுமையாக நிறை வேற்றினால் விருதுநகர் மாவட்டத்தில் நீர்ப்பாசன வசதி ஓரளவு முழுமை யடையும்.  விருதுநகர் மாவட்டத்தில் 2015 முதல் 2018 வரை கடுமையான வறட்சி ஏற்பட்டு 100 சதம் விவசாயம்பாதிப்பு ஏற்பட்டது.

பயிர் இன்சூரன்ஸ் கேட்டும், வறட்சி நிவாரணம் கேட்டும், மாவட்ட அளவில் விவசாயிகள் சங்கம் தொடர் போராட்டம் நடத்தி யது. இதன் விளைவாக நிவாரண மும், இழப்பீடும் கிடைத்தது.  மக்காச்சோளத்தில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் கடுமை யான பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ச்சி யான போராட்டத்தின் விளைவாக, இந்த ஒரு குறிப்பிட்ட பயிருக்கு இழப்பீடு என்ற வகையில் பல கோடி ரூபாய்களை விவசாயிகள் பெற்றுள்ள னர். கூட்டுறவு வங்கி மூலம் பயிர்க் கடன்கள், விவசாயிகளுக்கு வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளது.  மாவட்டம் முழுவதும் உள்ள விவ சாயிகளைப் பாதுகாத்திடும் கட்சியாக மார்க்சிஸ்ட் கட்சி உள்ளது.  ஒன்றிய பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பின்பு விவசாயிகளின் இடு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக உழ வடைக் கருவிகள் மற்றும் விவசா யத்திற்கு முக்கியமான பொருட்க ளான உரம், பூச்சிக்கொல்லி மருந்து, விதைகள் ஆகியவற்றின் விலை களும் கடுமையாக உயர்த்தப்பட்டுள் ளது.

 “காடு வௌஞ்சென்ன மச்சான்! நம் கையும், காலும் தான மிச்சம்” என்ற பாடல் வரிகள் தற்போதும் விவ சாயிகளின் விஷயத்தில் பொருத்த மாக உள்ளது. உற்பத்தி செய்யும் விளை பொருட்களுக்கு கட்டுபடியான விலை கிடைக்கவில்லை. இதனால், நஷ்டத்திற்கு விவசாயம் செய்யும் நிலை நீடித்து வருகிறது. இதில் மாற்றம் கொண்டு வர குறைந்தபட்ச ஆதார விலையை சட்டமாக்க வேண்டும். அனைத்து விளை பொருட் களையும் அரசே கொள்முதல் செய்யவும் திட்டங்களை உருவாக்க வேண்டும்.  விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு கட்டுபடியான விலையை தீர்மானிக்க விவசாயிகள் வளம் பெறும் வகையில் திட்டங் களை நிறைவேற்ற வேண்டும். வேளாண்துறை மற்றும் தோட்டக் கலைத் துறைகளில் விவசாயிகள் நேரடியாக பயன் பெற வழி வகை செய்திட வேண்டும்.